For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தலைமுறை அம்மாக்கள், சென்ற தலைமுறை அம்மாக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை!

சென்ற தலைமுறை அம்மாக்கள் செய்த நல்லவை, இந்த காலத்து அம்மாக்கள் செய்ய தவறியவை : அன்னையர் தின ஸ்பெஷல்!

|

ஹோட்டலில் சென்று ஆயிரங்கள் செலவு செய்து பன்னாட்டு உணவுகளை ருசித்து ரசிக்கும் நாம், ஒரு நாள் கூட வாயார அம்மா சமையலை பாராட்டி இருப்போமோ என்றால் 90% பேர் இல்லை என்று தான் கூறுவார்கள். ஏதோ ஒரு நொட்டை பேச்சு பேசி, கிண்டல் கேலி செய்து அம்மாவை சீண்டி பார்க்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஆனால், அம்மா என்ற உறவே சென்ற தலைமுறை, இந்த தலைமுறை என ஒப்பிடும் போது, வேறு விதமாக உரு மாறி நிற்கிறார்கள் என்பது தான் சோதனை. மாடர்ன் தாய்மார்கள் நிஜமாகவே அம்மாக்களாக தான் நடந்துக் கொள்கிறார்களா? சென்ற தலைமுறை அம்மாக்களுடன் ஒரு ஒப்பீடு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய் பால்

தாய் பால்

தாய் பால் குழந்தைக்கு ஆரோக்கியம் என அறிந்தவர்கள் அந்த தலைமுறை அம்மாக்கள். தொடர்ந்து தாய் பாலூட்டினால் அழகு கெட்டுவிடுமோ என அஞ்சுவது இந்த தலைமுறை அம்மாக்கள்.

நன்னெறி கதைகள்

நன்னெறி கதைகள்

அந்தந்த வயதில் குழந்தை நல்ல ஒழுக்கம், பண்புகள் கற்க நன்னெறி கதைகள் கூறினர் அந்த தலைமுறை அம்மாக்கள். குழந்தைளிடம் உட்கார்ந்து அவர்களது நாளில் நடந்த சம்பவங்களை கூட காத்து கொடுத்து கேட்க மறுப்பது இந்த தலைமுறை அம்மாக்கள்.

வீட்டு வேலை அவசியம்

வீட்டு வேலை அவசியம்

வீட்டில் வேலை செய்து உடல் வலிமையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருந்தது அந்த தலைமுறை அம்மாக்கள், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உதவி நாடி, நடுவயதிலேயே இடுப்பு வலி அவதிப்படுபவர்கள் இந்த தலைமுறை அம்மாக்கள்.

உறவுகள் பிணைப்பு

உறவுகள் பிணைப்பு

மாமா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, ஒன்னு விட்ட, ரெண்டு விட்ட சொந்தங்கள் உடனும் பிணைப்புடன் இருந்தது அந்த தலைமுறை அம்மாக்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கூட வாட்சப் கால்களில் மட்டுமே இணைந்திருப்பது இந்த தலைமுறை அம்மாக்கள்.

விட்டுக் கொடுத்து போவது

விட்டுக் கொடுத்து போவது

உறவுகள் என்றும் இணைந்தே இருக்க வேண்டும் என விட்டுக் கொடுத்து சென்றவர்கள் அந்த தலைமுறை அம்மாக்கள். சின்ன, சின்ன சண்டைகளை கூட ஊதி பெரிதாக்கி வீட்டை ரெண்டுப்பட செய்வது இந்த தலைமுறை அம்மாக்கள்.

நேரம் செலவழிப்பது

நேரம் செலவழிப்பது

குழந்தைகள் பள்ளிவிட்டு வீடு திரும்பியதும், இன்று என்ன படித்தாய், என்ன செய்தாய் என விசாரித்தவர்கள் அந்த தலைமுறை அம்மாக்கள், குழந்தைகள் வீடு திரும்பும் நேரம் கூட தெரியாமல், வேலை, வேலை என கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்த தலைமுறை அம்மாக்கள்.

பணத்தின் அருமை

பணத்தின் அருமை

குழந்தைகள் என்ன தான் அடம் பிடித்தாலும், அவர்களுக்கு எதை எப்போது வாங்கி தர வேண்டும், எது அவர்களுக்கு நல்லது, கெட்டது என அனைத்தும் அறிந்து செயற்பட்டவர்கள் அந்த காலத்து அம்மாக்கள். தொல்லை தாங்கவில்லை, காசு தானே போனால் போகட்டும் என பிள்ளைகளுக்கு நவீன கருவிகள் வாங்கி கொடுத்து, அவர்கள் எந்த வழியில் பயணிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருப்பவர்கள் இந்த காலத்து அம்மாக்கள்.

உடை நாகரீகம்

உடை நாகரீகம்

இந்தந்த வயதில் இந்தந்த உடைகள் தான் அணிய வேண்டும் என வளரும் போதே கூச்சம் அறிய வளர்த்தவர்கள் அந்த காலத்து அம்மாக்கள். சிறு வயதிலேயே தொப்புள் தெரிய உடை எடுத்து கொடுத்து கூச்சம் என்றால் என்ன என்பதை மரத்து போக செய்தவர்கள் இந்த காலத்து அம்மாக்கள்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

பரம்பரை, பரம்பரையாக கடைப்பிடிக்கப்பட்ட வழக்கங்களை சொல்லி கொடுத்து வளர்த்தவர்கள் அந்த காலத்து அம்மாக்கள். மேற்கத்தியம், மாடர்ன், ஃபேஷன் என சீரட்டுபவர்கள் இந்த காலத்து அம்மாக்கள்.

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டியை கூட பாசமாக பார்த்து, கவனித்து வளர்த்தவர்கள் அந்த காலத்து அம்மாக்கள். தங்களை பெற்ற பெற்றோரையே முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்கள் இந்த காலத்து அம்மாக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things This Gen Moms Should Learn From Previous Gen Moms!

Things This Gen Moms Should Learn From Previous Gen Moms!
Story first published: Saturday, May 13, 2017, 12:17 [IST]
Desktop Bottom Promotion