கல்யாணத்துக்கு அப்பறம் அண்ணங்கிட்ட, தங்கச்சி மிஸ் பண்ற விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அண்ணன் - தங்கை உறவு பாசமலர் போல தான் இருக்குமா என்றால் இல்லை. வீட்டில் 24x7 WWE போல சண்டை ஓடிக் கொண்டே இருக்கும். அண்ணனுக்கு பிடித்த சட்டினி செய்தால் கூட, உனக்கு அவன் மேல தான் பாசம், என்ன ஏன் பெத்த... என எரிமலைகள் வெடிக்கும்.

டிவி ரிமோட்டில் இருந்து, தட்டில் விழும் ஒரு எக்ஸ்ட்ரா முட்டை தோசை என சிறுசிறு விஷயங்கள் எல்லாம் ஐநா சபை பிரச்சனைகள் போல காணப்படும். இப்படி கீரியும், பாம்புமாய் இருக்கும் அண்ணன் - தங்கை உறவில் வெளிப்படையாக கூறத பாசமலர் எப்பிசோடும் இருக்கும்.

அது டும் டும் டும்.... ஆனபிறகு தான் அதிகம் வெளிப்படும். "அண்ணன்களுக்கு மட்டும் தான் தெரியும் தங்கைகள் சமைக்கும் சாம்பாரும் ரசம் தான்" என்று... என கேலி செய்து மீம் போட்ட அண்ணன்கள் எல்லாம்.., இரண்டாம் தாய் என மெச்ச துவங்குவார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருக்கம்!

நெருக்கம்!

திருமணத்திற்கு தம்பியை மடியில் அமர்த்தி கூட சோறு ஊட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்திற்கு அருகே அமர்வதை கூட சில உறவுகள் தவறாக பேசும். ஒரு அளவுக்கு மேல் உரிமை, அதிகாரம் எடுத்தக் கொள்ள முடியாது, என பாசமலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வாடா போடா...

வாடா போடா...

திருமணத்திற்கு முன் வாடா, போடா என்பது மிகவும் சகஜமாக இருக்கும். ஆனால், அதுவே திருமணத்திற்கு பிறகு தவறாக காணப்படும். அண்ணா, என்று தான் கூப்பிட வேண்டும், பெயர் சொல்லி அழைத்தால் கூட மரியாதை குறைவாக உள்ளது என மற்றவர் கூறுவார்கள். அண்ணனை ஏதோ மூன்றாம் நபரை அழைப்பது போன்ற உணர்வை தரும்.

அடம்பிடித்தல்!

அடம்பிடித்தல்!

ஒவ்வொரு மாதமும் அவனுக்கு சம்பளம் வந்ததும், அது வேண்டும், இது வேண்டும் என அடம் பிடித்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வோம். ஆனால், திருமணத்திற்கு பிறகு கேட்பதற்கு சிறிது தயக்கம் இருக்கும்.

கொடுக்கல், வாங்கல்!

கொடுக்கல், வாங்கல்!

இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில், அண்ணன், தங்கைக்குள் தனி கொடுக்கல், வாங்கல் இருக்கும். அதே கொடுக்கல், வாங்கல் திருமணத்திற்கு பிறகு இருக்குமா? இருந்தாலும் அதே மாதிரி கணவனை கேட்டு தர வேண்டிய சூழல், வரும் மன சங்கடங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

அடிதடி!

அடிதடி!

டிவி ரிமோட், வீட்டில் இருக்கும் ஸ்வீட் சாப்பிடுவதில், அம்மா சுடும் தோசை முதலில் யார் தட்டில் விழும், சட்டினி யாருக்கு பிடித்ததை அம்மா செய்ய வேண்டும் என பல அடிதடி சண்டைகள் காணாமல் போகும்.

அப்டேட்!

அப்டேட்!

வீட்டில் என்ன நடக்கிறது, என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள்? என்ற அப்டேட்கள் நாட்கள் செல்ல, செல்ல குறைந்துக் கொண்டே போகும். ஒருசில மாதங்கள் கழித்து சென்றால் தான் மொத்த அப்டேட்டையும் கொட்டித் தீர்ப்பார்கள். இதெல்லாம் ஏன் முன்னாடி செல்லல என்று கேட்க முடியாது... நம்மை மறந்துவிட்டார்களோ என்ற எண்ணம் வலியாக மனதில் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Sisters Miss From Brothers After Marriage!

Things Sisters Miss From Brothers After Marriage!