உனக்கு உயிர்க்கொல்லி நோய் இருந்தாலும் சரி, என் வாழ்க்கை உன்னோடு தான்- My Story #75

Written By:
Subscribe to Boldsky

எனக்கு அவளை கல்லூரி காலத்தில் தான் தெரியும். நானும் அவளும் ஒரே வகுப்பு தான்... அன்று கல்லூரியின் முதல் நாள்... நான் பல எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்கு சென்றேன்... முதல் நாள் என்பதால், ஆசிரியர் எங்களை அறிமுகம் செய்து கொள்ள சொன்னார்... நாங்களும் அறிமுகம் செய்து கொண்டோம்.. அப்போது தான் ஒரு பெண் முதல் நாளே லேட்டாக கல்லூரிக்கு வந்தாள்... அவள் தான் என் காதலி....

அவள் தான் என் காதலி என்று அப்போது எனக்கு தெரியாது.. அவள் ரொம்ப அழகாக இருப்பாள்... பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிவிடலாம். அவள் அத்தனை அழகு... எங்களது வகுப்பில் உள்ள அத்தனை பேருடைய கண்ணும் அவள் மீது தான் இருந்தது.. ஏய் சூப்பரா இருக்காடா என்ற சிலரது முனுமுனுப்பு என் காதில் விழுந்தது... பாவம் இந்த பொண்ணு என்று நினைத்துக் கொண்டேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவியரசி

கவியரசி

அவளது இருக்கை எனக்கு அருகில் தான்... எங்களது கல்லூரி காலம் மெதுவாக நகர்ந்து சென்றது.. நாட்கள் கடந்தது.. எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் நண்பர்கள் ஆனோம்.. கல்லூரி காலங்களின் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்த்தோம்... எங்களது நண்பர்கள் குழுவில் அவளும் ஒருத்தி ஆனாள்.. அவளது பெயர் கவியரசி.. மிகவும் நல்லவள் அவள்.. எங்களது வகுப்பில் இருந்த ஒவ்வொருவருக்கும் அவள் தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...

திறமைசாலி பெண்

திறமைசாலி பெண்

எங்கள் அனைவருக்கும் படிப்பில் அவளால் முடிந்த உதவிகளை செய்வாள்.. நாங்கள் சோர்வாக இருக்கும் போது எங்களை ஊக்குவிப்பாள். எங்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பாள். அவளது உதவியால் தான் நாங்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களை வாங்கினோம்... தேர்வுகள் எல்லாம் முடிந்து விடுமுறை வந்தது.. ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தோம்...

நல்ல குணம்

நல்ல குணம்

நான் கொஞ்சம் வசதியானவன் தான்.. கவியரசியை காணும் போதும் வசதியான வீட்டு பெண் போல தான் தெரிந்தது.. ஆனால் எங்களது நண்பர்கள் எல்லாம் அப்படி இல்லை.. எங்களது நண்பர்கள் வீட்டிற்கு சென்ற போது, அங்குள்ள வசதிக்கு ஏற்றவாறு அங்கு கவியரசி நடந்து கொண்டாள். சூழ்நிலைக்கு தகுந்தது போன்று மாறும் குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

கலையரசியின் வீடு

கலையரசியின் வீடு

கடைசியாக கலையரசி வீட்டிற்கு நாங்கள் சென்றோம்... அவளது வீடு அரண்மனையை போல இருந்தது... நாங்கள் அவளது வீட்டை கண்டு வியந்து போனோம்.. உள்ளே சென்றதும் தான் கலையரசியின் உண்மையான வாழ்க்கை பற்றி எங்களுக்கு தெரியவந்தது.. அவளது வீட்டில் அவள் ஒரு வேலைக்கார பெண்ணை போல நடத்தப்பட்டாள்...

அவளது கண்ணீர் பக்கங்கள்

அவளது கண்ணீர் பக்கங்கள்

நாங்கள் கலையரசியிடம் இது பற்றி கேட்டோம். அதற்கு அவள் என் அம்மாவும் அப்பாவும் என் அத்தையின் வீட்டில் கடன் வாங்கியிருந்தார்கள்.. நாங்கள் பலமடங்கான பணத்தை அவர்களுக்கு திருப்பி கொடுத்த போதும் கூட, அவர்கள் உறவினர்கள் அனைவரிடத்திலும், நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறினார்கள்.. மேலும் இன்னும் பாக்கி இருக்கிறது.. இருக்கிறது என்று தொல்லை செய்ததால் என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின் எங்களது இந்த வீடு, சொத்து அனைத்தையும் என் அத்தை தான் அனுபவித்து கொண்டிருக்கிறார்... என்னை இந்த வீட்டு வேலைக்காரியாக தான் நடத்துகின்றார் என்று கூறினாள்...

பாவம் அவள்

பாவம் அவள்

அவளது கதையை கேட்டு எங்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது... மேலும் அவளை அவளது அத்தையின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க போவதாகவும் கூறினாள்... அவளது அத்தையின் மகன் அவ்வப்போது குடித்து விட்டு வந்து கலையரசியிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், கலையரசி இதை பற்றி புகார் சொன்னால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை என்று கூறியும் அவள் அழுதாள்...

காதல்...

காதல்...

என்றுமே சிரித்த முகத்துடன் இருக்கும் கலையரசி அழுவதை எங்களை தாங்கமுடியவில்லை.. நாங்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டோம்... எனக்கு கலையரசியின் நினைவாகவே தான் இருந்தது.. எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது.. என் அம்மாவிடமும் அவளை பற்றி கூறினேன்.. என் அம்மாவிற்கும் அவளை பிடித்திருந்தது. நல்ல பொண்ணுடா... என்று கூறினார்.. நான் ஏதோ வேகத்தில், அவள் நம்ம வீட்டிற்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்ல என்று கேட்டுவிட்டேன்.. என் அம்மா அதிர்ந்து விட்டார்.. அப்படி எல்லாம் செய்து விடாதே.. உன் அப்பாவிற்கு பதில் சொல்ல முடியாது என்று கூறினார்...

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

ஆனால் எனக்கு அவளை பிடித்திருந்தது... அன்று முதல் அவளை நான் காதலிக்க ஆரம்பித்தேன்.. அவளுடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன்.. அவள் என்னிடம் அவளது பிரச்சனைகளை எல்லாம் கூறுவாள்.. நான் அவளுக்கு ஆறுதலாக இருந்தேன்.. என் மீது அவளுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது... எங்களது கல்லூரி காலங்கள் முடிந்தது.. ஒரே கம்பெனியில் நாங்கள் வேலைக்கு சேர்ந்தோம்....

இன்ப அதிர்ச்சி...

இன்ப அதிர்ச்சி...

என் காதலை நான்கு ஆண்டுகளாக என் மனதிற்குள்ளேயே வைத்திருந்தேன்.. ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தவள் என் டைரியை எடுத்து படித்துவிட்டு நான் காதலித்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டாள்... ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியாது.. என் பிறந்தநாள் ஐந்து மாதங்கள் கழித்து வந்தது.. எப்போது எனக்கு அவள் ஒரு பிரேஸ்லேட் பரிசாக கொடுத்தாள். அதில் என் பெயரும் அவள் பெயரும் இருந்தது.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. அப்போது தான் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்...

அழுகை...

அழுகை...

எனக்கு அவள் கூறிய அந்த நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை... நான் ஒரு ஆணாக இருந்தாலும் கூட அவளது தோளில் என் வெட்கத்தை விட்டு சாய்ந்து அழுதுவிட்டேன்... அவள் என்னை பார்த்து சிரித்தாள்... அழுகாதே என்று கூறினாள்... என் வாழ்க்கை நிறைவாக இருந்தது... நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டோம்... அவள் என்னை உண்மையாக காதலித்தாள்.. அவளை வருணிக்க வார்த்தையே இல்லை.. அவளை போன்ற ஒரு பெண்ணை யாரும் கண்டிருக்கவே முடியாது..

பிரிவு

பிரிவு

எங்களது காதல் வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது... அப்போது தான் எங்களது காதலில் பிரச்சனையே ஆரம்பித்தது.. அவள் என்னுடன் ஒரு மாதமாக எந்த ஒரு காரணமும் இன்றி என்னிடம் பேசாமல் இருந்தாள். நான் காரணம் கேட்க செல்லும் போது எல்லாம் என்னை அவமானப்படுத்தி அனுப்பினாள்.. எனக்கு என்ன என்றே புரியவில்லை... ஏன் இப்படி செய்கிறாள் என்று ஒன்றும் புரியாமல் தவித்தேன்....

மருத்துவமனை?

மருத்துவமனை?

அன்று இரவு என் நண்பன் ஒருவனுடைய போன் கால் வந்தது... அவன் என்னிடம் நான் உன் காதலியை மருத்துவமனையில் பார்த்தேன் அவள் சோகமாக இருந்தாள். நீண்ட நேரம் டாக்டரிடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் என்று கூறினான்... இவள் எதற்காக மருத்துவமனைக்கு சென்றாள் என்று நான் அடுத்த நாள் அவளிடம் கேட்டேன்.. அவளை திட்டி, அடித்து என்ன ஆனாது என்று கேட்டேன்.. அப்போது தான் அவள் எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்று கூறினாள்... ஏய்.. என்னடி சொல்லற... விளையாடாத என்று கூறினேன்...

கெஞ்சி பார்த்தேன்...

கெஞ்சி பார்த்தேன்...

அவள் நான் கூறுவது உண்மை தான்... நான் இறக்க போகிறேன்... என்னை விட்டு போய்விடு என்று என்னை கெஞ்சினாள்.. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை... என்னை விட்டு அவள் பிரிந்து சென்றுவிட்டாள்... இருப்பினும் நான் அவளிடம் அடிக்கடி உன்னை விட்டு ஒருநாளும் இருக்க முடியாது... இருவரும் திருமணம் செய்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷமாக இருப்போம் என்று எல்லாம் கூறி பார்த்தேன் ஆனால் அவள் என் பேச்சை கேட்கவே இல்லை...

திருமணம்...

திருமணம்...

எனக்கு என்ன செய்து அவளை திருமணம் செய்து கொள்வது என்றே தெரியவில்லை... ஒரு நாள் என் நண்பன் ஒரு யோசனை சொன்னான் என்று அதை டிரை செய்தேன்... நான் இறக்க போவதாக சொல்லி அவளை வர வைத்து அவளை திருமணம் செய்து கொண்டு தான் இறக்க வேண்டும் என்று கூறினேன்.. அவளும் சம்மதம் சொன்னாள்.. அவளது கழுத்தில் தாழியும் கட்டினேன்.. அதற்கு பின் அவளிடம் இது எல்லாம் ஒரு நாடகம் தான் என்று கூறினேன்... அவள் என்னை திட்டினாள்.. அழுதாள்... ஏன் இப்படி செய்தாய் என்று என்னை திட்டினாள்....

என் மனைவிக்காக காத்திருக்கிறேன்...

என் மனைவிக்காக காத்திருக்கிறேன்...

வீட்டிற்கு வா போகலாம் என்றேன்.. அவள் வரவில்லை... அவள் விடுதிக்கே சென்றுவிட்டாள்... அது தான் நான் அவளை கண்ட கடைசி நாள்.. அதற்கு பின் அவளை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.. அவள் எங்கே சென்றாள்? என்ன ஆனாள் என்று ஒரு தகவலும் இல்லை.. இது நடந்து பத்து வருடங்கள் ஆகிறது. என் வீட்டில் என்னை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார்கள்.. ஆனால் நான் இன்னும் அவளை மறக்கவில்லை... என் மனைவியை நான் மறந்து வாழவும் மாட்டேன்...! அவள் எங்கேயாவது இருப்பாள்.. என்னை தேடி ஒருநாள் கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My story : you will definitely come to my life again

My story : you will definitely come to my life again
Story first published: Wednesday, November 22, 2017, 16:59 [IST]