கல்யாணமாகி குழந்தைய ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய நான், குடிச்சு நாசமா போன கதை - My Story #084

Posted By:
Subscribe to Boldsky

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். குடி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பல சமயங்களில் நல்ல உறவுகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. எத்தனையோ சமயங்களில் குடித்துவிட்டு சண்டை போட்டு, தேவையில்லாதவற்றை பேசி பிரிந்த நல்லுறவுகள் இருக்கின்றன.

என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி தான் ஒரு சம்பவம் நடந்தது. குடிப்பது தவறெனில், குடித்துவிட்டு நமது காதலிக்கு கால் செய்வது தவறிலேயே பெரும் தவறு. இன்றுடன் எங்களுக்குள் ப்ரேக்-அப் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. இதில் இரண்டு வருடங்கள் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.

அன்று நான் அவளிடம் பேசி சண்டையிட்டு பிரிந்த பிறகு ஒரு யோகி போல தான் திரிந்து வருகிறேன். என்னுள் இதற்கு முன் இவ்வளவு அமைதி இருந்ததில்லை. என் அமைதிக்கு காரணம் நான் திருந்திவிட்டேன் என்பதல்ல. அவள் என்னைவிட்டு பிரிந்துவிட்டாள் என்பதே ஆகும்.

என் வாழ்வில் இந்த அமைதியை ஏற்படுத்திய அந்த இரைச்சல் உங்கள் காதுகளை செவிடாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டில் ஒன்று...

இரண்டில் ஒன்று...

காதலிலும், பல நேரங்களில் நம் வாழ்விலும் நாம் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? மூளையையும், இதயத்தையும் ஒன்றாக வெல்ல பார்ப்பது தான். இது முடியாத காரியம் என்பதை அறிய ஒருவனுக்கு சிறந்த அனுபவம் தேவைப்படுகிறது.

ஒரு செயலில் நமது மூளையும், இதயமும் எப்போதுமே ஒரே மாதிரியான முடிவை எடுக்காது. எலியும், பூனையும் போல, இதுவொரு மூலையையும், அதுவொரு மூலையையும் தான் தேர்வு செய்யும். இதில், ஏதாவது ஒன்றை வெற்றிக் கொள்ள நீங்கள் முயல வேண்டும்.

ஆறு வருடங்கள்!

ஆறு வருடங்கள்!

ஆறு வருட காதல் வாழ்க்கை. இதில் ப்ரேக்-அப்பாகி மூன்று வருடங்கள் ஆகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் நான் படாதபாடில்லை. அவளை எண்ணி, எண்ணி நான் வருந்தாத நாளில்லை. கடந்த ஆறு மாதங்களாக மீண்டும் அவள் மீது காதல் கொள்ள துவங்கினேன். ஆனால், அவள் நிச்சயம் என் மீது காதல்வயப்பட வாய்ப்பே இல்லை.

அன்றைய நாள்...

அன்றைய நாள்...

சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த சம்பவம் நடந்தது. நான் செய்த முதல் தவறு குடித்தது. அதுவும் அவளது பிறந்தநாளன்று குடித்தது. நான் செய்த இரண்டாவது தவறு, அவளுக்கு அந்த குடி போதையில் கால் செய்தது. இது தான் நான் செய்த பெரும் தவறு. அன்று அவள் என்னிடம் இருந்து எதிர்பார்த்தது அந்த அழைப்பை அல்ல. உண்மையில் அந்த சூழ்நிலையில், நான் போதையில் அழைப்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

ஹீரோ!

ஹீரோ!

தமிழ் சினிமாக்களையும், நண்பர்களின் மொக்கை ஐடியாக்களையும் பார்த்து, கேட்டு சீரழிந்த எண்ணற்ற காதல் கதைகளில் என்னுடையதையும் ஒரு மூலையில் சேர்த்துக் கொள்ளுங்கள். "நீ அவ்வளவோ போதை இல்ல மச்சான்.." என ஃபுல் போதையில் இருப்பவனின் பேச்சைக் கேட்டு நான் அவளுக்கு போன் செய்து பேசினேன். (என்னை தான் எதையாவதை எடுத்து அடித்துக் கொள்ள வேண்டும்)

நான் விரும்பியது!

நான் விரும்பியது!

அன்றிய நாள் எப்படி இருக்க வேண்டும் என நான் ஒரு பட்டியலிட்டு வைத்திருந்தேன்...

1. அவளுக்கான சிறந்த துணை நான் என்பதை அவளுக்கு அன்று நிரூபிக்க வேண்டும்.

2. அவளது வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்தநாளை கொண்டாடியிருக்க கூடாது என்ற அளவில், கொண்டாடி தீர்க்க வேண்டும்.

3. அவளுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன என்பதை முழுமையாக அறிந்த நான், அன்றைய நாள் முழுவதும், அவளுக்கு பிடித்தாக அமைக்க வேண்டும்.

4. நாள் முழுக்க அவளை அசத்தும் படியாக பரிசுகள் கொடுத்து திணறடிக்க வேண்டும்.

5. அவளது அறை முழுக்க, அவளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பொம்மைகள் நிறைத்து வியப்படைய செய்ய வேண்டும்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

அதில் ஒன்று கூட நடக்கவில்லை. உண்மையில் அதற்கான சந்தர்பம் கிடைத்தும், நானே அவற்றை முழுவதுமாக அழித்துக் கொண்டேன். கௌதம் மேனன் இயக்கிய "நீதானே என் பொன்வசந்தம்" படத்தை பார்த்து பலரும் தெரிவித்த கருத்து, இப்படி மொக்கையான விஷயத்துக்கு எல்லாம சண்டை போட்டு வருஷக் கணக்கா பேசாமா இருப்பாங்க... என்பதாகும்.

ஆனால், காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்... உண்மை அதுதான் என்று.

அதற்காக நான் குடித்ததை நியாப்படுத்தவில்லை. இதற்கு முன்னும் நான் குடித்துவிட்டு அவளுடன் பேசியதுண்டு. ஆனால், அன்று.... அவளது வாழ்வில் முக்கியமான நாள்... அவளது பிறந்தநாளன்று நான் குடித்துவிட்டு பேசியது தான் பெரும் பிரச்சனைக்காக ஆணிவேர்.

முதல் அழைப்பு!

முதல் அழைப்பு!

காதலில் பெரும் சந்தோஷத்தை அளிப்பது, நீண்ட நேர முத்தங்களோ, ஆரத்தழுவி மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதோ அல்ல. நமது முக்கியமான தருணங்களை நமக்கானவரிடம் முதலாவதாக பகிர்ந்துக் கொள்வது தான். அன்று நான் கால் செய்ததே அரைமணிநேரம் தாமதாமாக தான். அதிலும் குடி போதையில்.

அவளது அமெரிக்க அண்ணன் முதல், பக்கத்து தெரு தோழி வரை அனைவரும் கால் செய்த போதும், அவற்றை எல்லாம் தவிர்த்து நான் அழைப்பேன் என அவள் காத்திருந்த நேரத்தில்... எனது அரைபோதை கால் அவளது மொத்த சந்தோஷத்தையும் கெடுத்துவிட்டது.

மொத்தமாக 'கட்'!

மொத்தமாக 'கட்'!

அவள் அதற்கு முன்னும் என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். ஒருவேளை நான் அன்று போதையில் இல்லாமல் இருந்திருந்தால்.. என் தவறை ஏற்றுக் கொண்டு கெஞ்சியிருப்பேனோ என்னவோ. பதிலுக்கு என்றோ அவள் செய்த பைசாவிற்கு பிரயோசனம் இல்லாத, குழி தோண்டி புதைத்த பிரச்சனையை கிளப்பி... "நீ அன்னிக்கி அப்படி பண்ணலடி..." என நான் ஏதோ பேச. அதற்கு அவள் பதில் பேச. மொக்கையான விஷயத்தை எல்லாம் மணிக்கணக்கில் சண்டையிட்டு... காதல் பிரிந்தது தான் மிச்சம்.

தேவதைக்கும் மேல...

தேவதைக்கும் மேல...

அவள் தான் என் தேவதை என கவிதை எழுதவெல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் கோட் (Code) எழுதுவது தான். அன்று ஒருநாளாவது அவளுக்கு பிடித்த மாதிரி நான் நடந்துக் கொண்டிருந்தால். இந்த மூன்று வருடத்தில் என்றோ ஒருநாள் எங்கள் திருமணம் நடந்திருக்கும்.

பொதுவாக நாம் சண்டையிடும் போது, இதயம் விட்டுக் கொடுத்து போ என கூறும். மூளை, அவ அப்படி பேசுறா... நீ என்ன குறைச்சலா.. இந்தா அன்னிக்கு இது நடந்துச்சு.. அப்போ அவ இப்படி எல்லாம் பேசுனா.. என என்றோ தன்னுள் சேமித்து வைத்த நிகழ்வுகளை எல்லாம் எடுத்துக் கொடுக்கும்.

காதல் இதயப்பூர்வமானது. எனவே, அந்த நேரத்தில் நான் எனது மூளை எடுத்துக் கொடுத்த நிகழ்வுகளை கோர்வையாக எடுத்து பேசியிருக்க கூடாது என்பதை கடந்த ஆறு மாதங்களில் தான் கற்றுக் கொண்டேன்.

அனைத்திலும் பிளாக்!

அனைத்திலும் பிளாக்!

இந்த சோஷியல் மீடியா யுக காதலில் இருக்கும் பெரிய அக்கப்போரே.. பிளாக் ஆப்ஷன் தான். புறா, கடிதங்களுக்கு எல்லாம் இந்த பிளாக் ஆப்ஷன் இல்லை. ஆகையால்... நாம் நமது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. இந்த பிளாக்கிங் யுகத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

நோ சான்ஸ்!

நோ சான்ஸ்!

கால் கட்டான அடுத்த நிமிடமே, என்னை அனைத்து வழிகளிலும் பிளாக் செய்துவிட்டாள். நேராக பேசவும் வாய்ப்பு தவறவில்லை. தோழிகள் மூலமாகவும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. இதற்கு இடையே மீண்டும் மூளை குறுக்கிட்டு. அவ என்ன அவ்வளோ பெரிய இவளா... நீ ஏண்டா... இப்படி பின்னாடியே போற என உசுப்பேற்றிவிட... இதயத்தின் பேச்சை கேட்காமல். கொஞ்ச காலம்... இது தான் வாய்ப்பென அதிக குடியுடன் குடித்தனம் நடத்திவிட்டேன்.

நினைவுகள்!

நினைவுகள்!

அவ்வப்போது மனது அவளுடனான நினைவுகளை நினைவுப்படுத்தும் போதெல்லாம் காதல் பெருக்கெடுத்து ஓடும். அவ்வப்போது மூளை அதற்கு தடுப்பணைக் கட்டி முட்டுக்கட்டைப் போடும். இப்படியாக பேசலாமா.. வேண்டாமா... அவள் மீண்டும் என்னை ஏற்பாளா என இரண்டரை ஆன்டுகள் ஓடின.

கடந்த ஆறு மாதங்களாக தான் இதயத்தின் பேச்சை மட்டும் கேட்போம் என சிந்தித்தேன். அவள் மீது மீண்டும் காதல்... தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். அப்படி, இப்படி அடம் பிடித்தவள். எப்படியோ... அடுத்த மாதம் ஊருக்கு வரும் போது நேரில் பார்க்கலாம் என கூறியிருக்கிறாள்.

மீண்டும்...

மீண்டும்...

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவளது பிறந்தநாள் அன்று பிரிந்த காதல்... அடுத்த மாதம் வரவிருக்கும் அவளது பிறந்தநாளில் சேரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

அந்த சண்டை மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால். இந்நேரத்திற்கு திருமணம் செய்து, குழந்தையை கிண்டர்கார்டனில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்க காத்திருக்க வேண்டியவன். இன்று மீண்டும் அவளுடன் காதல் பயணத்தை துவக்க... ஆரம்ப புள்ளியிலேயே காத்திருக்கிறேன்.

வேணாம் பாஸ். குடிக்கிறது தப்பில்ல. ஆனால், குடி போதையில உங்க ஆளுக்கு கால் பண்றது தான் பெரிய தப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: Dont Dial Your Girls Number When You Drunk?

My Story: Dont Dial Your Girls Number When You Drunk?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter