இது தவறில்லையா? நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா?

Posted By: Aashika Natesan
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நிமிடங்கள் மீண்டும் பிறக்காதா என்று ஏங்குகிறேன். வாழ்வின் இனிய பக்கங்களாய் சேர்ந்த அந்த ஒவ்வொரு விநாடியும் என் வாழ்நாளுக்கான போசாக்கு.

பார்த்தவுடன் வரும் காதலெல்லாம் போலியானவை, அவை நிலைக்காது, அது வெறும் ஈர்ப்பு மட்டுமே, என்று நம்ப மறுக்கும் என் முதற் காதலே லவ் ஆன் ஃபர்ஸ்ட் சைட் தான்.

புதிய ஊர் புதிய அலுவலகம் புதிய மனிதர்கள் அன்றைய தினம் மீட்டிங் ஹாலில் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்களை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் யாருமில்லை அலுவலைத்தாண்டி சினிமாவைக் கடந்து அரசியலைத் தொட்டு நின்றது எங்களது பேச்சு. பேச்சு காரசாரமான விவாதமாக மாறி ஒவ்வொருவரும் உணர்ச்சிப் பொங்க தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீர் மாற்றம்...

திடீர் மாற்றம்...

திடீரென்றொரு அமைதி எனக்கு மட்டும். ஆம் எனக்கு மட்டும் தான். மற்றவர்கள் பேசுவதை பார்க்க முடிந்தது ஆனால் என்னால் கேட்க முடியவில்லை எனக்கு எதிர்த்திசையில் உள்ள கண்ணாடிச் சுவற்றின் வழியே ஓர் உருவம் கடந்து செல்வதை கண்கொட்டாமல் பார்க்கிறேன். அப்போது அதை உணரவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்த்து உறுதிப்படுத்திய தகவல் இது.

அந்த உருவம் அப்படியே எங்கள் அறையைக் கடந்து அடுத்த அறைக்குள் நுழைந்துவிட்டது. சுயநினைவுக்கு வந்த நான் மெல்ல எழுந்து பக்கத்து அறையை பார்க்கும்படி இடத்தை மாற்றி உட்கார்ந்துகொண்டேன்.

பல உருவங்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. நான் தேடிய உருவத்தை காணவில்லை. நானும் எக்கி எக்கி தேடி ஏமாந்தது தான் மிச்சம்.

என் கவனம் முழுவதும் அவனில் மூழ்கியது...

என் கவனம் முழுவதும் அவனில் மூழ்கியது...

நின்றிருந்த உருவங்கள் எல்லாம் நகர்ந்த பிறகு பொறிந்த நூலைப் போல மொருமொருவென்ற சுருட்டை முடி மெல்ல பார்வையை இறக்கினேன், நீண்ட புருவங்கள், தூக்கமிழந்து உள்ளே சொருகிய கண்கள், ட்ரிம் செய்த குறுந்தாடி, கச்சிதமான மீசை என நான் தேடிய உருவம் அங்கே உட்கார்ந்திருந்தது. எதோ ஒன்று மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டியது.

எந்திருப்பது போல, வொயிட் போர்டில் சென்று தேதியை மாற்றுவது போல, மூலையில் உட்கார்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்த அலுவலக நண்பரிடத்தில் பேசுவது போல, ஒருவர் சொல்வது கேட்காமல்.... கேட்பதற்காய் எக்குவது போல, பேனா கொடுப்பது போல என பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பக்கத்து அறையில் மட்டும் என் கவனம் மூழ்கி கிடக்கும்படி பார்த்துக் கொண்டேன்.

புதிய உணர்வு...

புதிய உணர்வு...

வித்யாசமாக உணரும் வகையில் அங்கே எதுவும் இருக்கவில்லை. சாதரணமான மிகச் சாதரணமான ஒரு உருவம் தான். சிறுவயதிலிருந்து பார்த்து அலுத்துப்போன மங்கிய நீலநிறத்தில் சட்டை அணிந்திருந்தான். அலுத்துப் போன நிறம் அன்று புத்தம் புதிதாய் இதுவரை பார்த்திராத நிறமாய் தெரிந்தது. எதையும் உணர்த்தவில்லை என்னிடம் எதுவும் பேசவில்லை அதே நேரத்தில் இவ்விஷயம் எனக்கு அலுத்துவிடவும் இல்லை. எவ்வளவு நேரம் பார்த்தாலும் புரியாத புதிராக, சுவரஸ்யமாகத்தான் இருந்தது.

இந்த சுவாரஸ்யத்திற்காகவே எனக்கு அலுவலகம் செல்ல பிடித்திருந்தது. அந்த அலுவலகம் சென்ற 3 வது நாளில் அவனுடன் பேச ஆரம்பித்துவிட்டேன். இப்போது வரை ஒரு நல்ல நண்பனாக தொடருகிறான் என் அன்பன், ரகசிய காதலன்.

துரோகமா?

துரோகமா?

இது தவறில்லையா? நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா? பின்னாட்களில் என் மனதில் இப்படியொரு எண்ணம் இருந்தது தெரிந்தால் ? என் காதலைச் சொல்லி எங்கள் நட்பு பிரிந்துவிட்டால்? இப்போது இல்லையென்றாலும் வாழ்நாளில் ஏதோ ஒரு நாளில் என்னை தேர்ந்தெடுத்தது தவறு என்று அவன் மனம் நினைத்துவிட்டால் அவனுக்கான பெண்ணா நான்? என்று எக்கச்சக்க கேள்விகள் எல்லாவற்றையும் கடந்து என்னால் அவன் சங்கடப்படக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அவன் வாழ்வின் ஓர் உறுத்தலாய் நான் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

மதில் மேல் பூனையாய்...

மதில் மேல் பூனையாய்...

மனதிலொரு ஆசையுடன் உதட்டளவில் சிரித்து பேச, சின்ன இடைவெளியுடனே பழக வாய்க்கும் சந்தர்ப்பங்களை என்னால் ஏற்க முடியவில்லை. சுவாரஸ்மாய் இருந்த விஷயமெல்லாம் மெல்ல கடினமானதாக மாறத்துவங்கியது.

என்னில் ஏற்ப்பட்ட மாற்றத்தை உணர்ந்தானோ என்னவோ என் காதலைச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தான். நானும் தயாரானேன் ஆனால் களமிறங்கவில்லை.

முடிவிலி பயணம்....

முடிவிலி பயணம்....

என் முதற்காதல். நான் நேசிக்கும் ஓர் உறவு. எத்தனை சங்கடங்களை சந்தித்தாலும் கடந்து போகிற ஆற்றலைக் கொடுத்த அன்பன். காதல் அனுபவத்தை பரிசளித்த என் ரகசிய காதலனை எந்தவொரு காரணத்திற்காகவும் நான் இழக்க விரும்பவில்லை. இதே பேரன்புடன் உன்னை விலகி நின்று நேசிக்க விரும்புகிறேன். ஆம் விலகி நின்று தான். அந்த விலகலில் அந்த இடைவெளியில் என் அன்பு நிரம்பி வழியும் உனக்கான என் காதலாக அது உருமாறி கசிந்துருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Painful First Love a young Girl.

True Story: A Painful First Love a young Girl.