Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
அன்று ஆப்ரிக்கா தெருக்களில் அபாயமாக இருந்த குழந்தை இன்று அன்புடனும், நலமுடனும்!
நீங்கள் ஒருவேளை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்களை பெரிதாக பயன்படுத்தாமல் இருந்திருந்தால், இக்குழந்தையின் புகைப்படம் உங்களுக்கு புதியதாக தான் இருக்கும். ஆனால், பலஆயிரக்கணக்கில் அன்பிற்கும், கருணைக்கும் எடுத்துக்காட்டாக கூறி இப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வெறும் பரிதாபத்திற்குரிய புகைப்படமாக மட்டும் கண்டுவந்த இந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார், யாருடன் இருக்கிறார்...

அன்ஜா ரிங்க்ரன் லவ்ன்!
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் எனும் பெண்மணி, ஆப்ரிக்க குழந்தைகளின் படிப்பு மற்றும் மேன்மை மையத்தை நிறுவி, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார். இவர் தன் மையத்தின் மூலமாக பல குழந்தைகளை பாதுகாத்து வருகிறார்.
Image Source

ஒரு போன் கால்...
ஒரு நாள் அன்ஜா ரிங்க்ரன் லவ்ன்வுக்கு ஒரு போன் கால் வந்தது, மறுமுனையில் இருந்த நபர், "இரண்டு - மூன்று வயதுமிக்க ஒரு குழந்தை பெற்றோர்களால் கைவிடப்பட்டு, தெருவில் பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறார்" என கூறினார்.
Image Source

தயக்கம் இன்றி விரைந்தார்...
அந்நபர் கூறிய மறு நிமிடமே தயக்கம் இன்றி, அவர் கூறிய இடத்திற்கு விரைந்தார் அன்ஜா ரிங்க்ரன் லவ்ன். அந்த குழந்தையை மீட்டு, அந்த குழந்தைக்கான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
Image Source

குழந்தைகள்...
அன்ஜா ரிங்க்ரன் லவ்வின் அன்பின் குடைக்கு கீழ், பல ஆப்ரிக்க குழந்தைகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர் நைஜீரியாவில் இருந்து பல நல்ல செயல்களை செய்து வருகிறார்.
Image Source

துணையுடன், துணிவுடன்!
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் தன் துணை டேவிட்டின் துணையுடன் துணிவுடன் பல குழந்தைகளுக்கு நல்வாழ்க்கை அளித்து வருகிறார். இவர்களுக்கு பிறந்த 2 வயது குழந்தையுடன், இவர்களுடன் 34 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.
Image Source

மனித உரிமை!
அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் மனித உரிமைக்காக போராடி வரும் ஒரு சோசியல் ஆக்டிவிஸ்ட் ஆவார். இவ்வுலகில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் உரிய உணவு, படிப்பு, சீரான வாழ்க்கை என்பதை உருவாக்க வேண்டும் என இவர் கூறுகிறார்.
Image Source

ஃபேஸ்புக் குழந்தை...
அன்று ஃபேஸ்புக்கில் அனுதாபத்திற்காக பகிரப்பட்ட குழந்தை இன்று அன்ஜா ரிங்க்ரன் லவ்ன் கனிவான இதயத்தால் நல்ல நலத்துடனும், ஈடிணையற்ற அன்பின் மடியில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.



Click it and Unblock the Notifications