"24" படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

Posted By:
Subscribe to Boldsky

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது சூர்யா நடித்து, விக்ரம் குமார் இயக்கிய 24 திரைப்படம். இது சூர்யாவின் திரை பயணத்தில் ஓர் மையில் கல் என்று குறிப்பிடலாம்.

தெறி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

அதே போல இந்த 24 திரைப்படத்தில் இருந்து வி.எப்.எக்ஸ், கேமரா மட்டுமின்றி நீங்கள் வாழ்வியல் மற்றும் உறவுகள் குறித்தும் சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

ஆம், உறவுகள் மத்தியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், மனித உறவில் மதிப்பு, இல்லறம், மெய் மகிழ்ச்சி போன்றவை பற்றியும் நாம் 24 படத்தில் காண முடிகிறது.

தி ஜங்கிள் புக் படத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்மை

தாய்மை

தாய்மை என்பது குழந்தை பெற்றால் தான் என்பதல்ல, ஒருவர் மீது நீங்கள் முழுமையாக அன்பு செலுத்தி, அவர்களது வாழ்க்கைக்காக உங்களை முழுமையாக அற்பணிக்கும் போதும் நீங்கள் தாய்மையை உணர முடியும்.

 நாவினால் சுட்ட புண்

நாவினால் சுட்ட புண்

ஒருவரை ஓங்கி அடித்துவிட்டால் கூட அந்த காயம் அல்லது மன சங்கடம் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் தகாக வார்த்தைகளில் பேசுவது வாழ்நாள் முழுக்க நாம் அவர்களை இழக்கும் நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

 அன்பான குடும்பம்

அன்பான குடும்பம்

இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்தது, தங்கமோ, வீடோ, டைம் மெஷினோ அல்ல. அன்பான குடும்பம். உங்களை முழு மனதாக நேசிக்கும் மனிதர்கள். மனித அன்பினை விட விலை உயர்ந்த பொருள் உலகில் வேறேதும் இல்லை.

 எளிமையே இன்பம்

எளிமையே இன்பம்

எளிமையான வாழ்க்கை தான் உங்களுக்கு மிகையான இன்பத்தை தரவல்லது. பணம் அதிகமாக சேர, சேர மனத்திலும், வாழ்விலும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகும். எனவே, எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் எளிமையை மறந்துவிட வேண்டாம்.

பொறாமை

பொறாமை

நம் உழைப்பை தவிர்த்து, பிறர் உழைப்பை திருட அல்லது அவர்களின் சமூக நிலை குறித்து பொறாமை படுவது. எந்த விதத்திலும் சரியானதல்ல. மேலும், இது உங்கள் நிலையை தான் கீழே கொண்டு செல்லும்.

 வினை விதைத்தவன்

வினை விதைத்தவன்

ஒருவருக்கு தீங்கு நினைக்கும் போது ஒன்றை நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த தீங்கு பல மடங்கு அதிகமாக உங்கள் வாழ்வில் வெகு விரைவில் நடக்கும். அதை தாங்கிக் கொள்ளும் மன தைரியம் உங்களிடம் இருக்க வேண்டும். இது நல்லதுக்கும் பொருந்தும்.

இனிஷியல்

இனிஷியல்

அப்பா பெயர் தான் இனிஷியல் போட வேண்டும் என்றில்லை. அன்பையும், உயிரையும் தாய்ப்பாலாக ஊட்டி வளர்க்கும் அன்னையின் பெயரையும் கூட இனிஷியலாக போட்டுக் கொள்ளலாம்.

 வேலையும், குடும்பமும்

வேலையும், குடும்பமும்

என்ன தான் பெரிய வேலையாக இருந்தாலும். உயர் பதவி, அந்தஸ்து என எதுவாக இருப்பினும். குழந்தைகளுடன் அந்தந்த பருவத்தில் நேரம் செலவழிக்க தவற கூடாது.

காதல்

காதல்

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். காதலிக்காக, நமது அன்புக்குரியவருக்காக நாம் செய்யும் அனைத்தும் ஈடிணையற்ற இன்பத்தை தரவல்லது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From The Movie 24

We can learn some Relationship Tips From Sci-fi Tamil Movie 24, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter