For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

M.S.டோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா?

|

M.S.டோனி என்பவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து உலகின் சிறந்த பவுலர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் அடித்த பிறகு தான் பிரபலம் ஆனார். ஆனால், அதற்கு முன்பு அவர் இழந்த வாய்ப்புகள், தவித்த தருணங்கள், போராடிய சம்பவங்கள் என்ன என்பது சில நாட்கள் முன்பு வரை யாருக்கும் தெரியாது.

இது சாமானிய மக்களின் வாழ்விலும் பொருந்தும். நாம் வெற்றிப்பெற்ற பிறகு இதெல்லாம் பெரிய விஷயமா என அதை எளிதாக நகையாடி கூறிவிடுவார்கள். அதன் பின்னணியில் நாம் கண்ட அவமானங்கள், தோல்விகள், பரிதவிப்புகள் பற்றி நாம் மட்டுமே அறிந்திருப்போம்.

மணலும், சிமெண்டும் சேர்ந்தாள் தான் செங்கல்லின் பிணைப்பு வலுவாகும். அதுபோல தான் வாழ்க்கையும். வெற்றியும், தோல்வியும் கண்டால் தான் வாழ்வின் பிடிப்பு உறுதியாகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடமான முடிவுகள்...

திடமான முடிவுகள்...

உங்கள் மனதிற்கு பட்டது, நீங்கள் சரியென நினைக்கும் திடமான முடிவுகளை தைரியமாக எடுங்கள். பெரிய சாதனைகளுக்கான முடிவுகள் எல்லாவற்றையும் இந்த சமூகளும் உலகமும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதனையாக வெளிவந்த பிறகு தான் வெட்கமின்றி கொண்டாடின.

ஊர் பேச்சு...

ஊர் பேச்சு...

உன் வெற்றியை புகழாத, வாழ்த்தாத இந்த ஊரின் பேச்சை, உன் தோல்வியின் போது இகழும் போது, அதை கேட்க செவி சாயக்காதே. இந்த ஊருக்கு பழிசொல்லவும், குற்றம் கூற மட்டும் தான் மட்டும் தான் தெரியும். கீழே இறங்கி செயற்படுத்த தெரியாது. எனவே, ஊர் பேச்சுக்கு செவி சாய்த்து, உன் வெற்றியை தவறவிடாதே.

உறுதுணை...

உறுதுணை...

நமது வாழ்வின் எல்லா தருணத்திலும் சிலர் வருவார்கள், போவார்கள். ஆனால், நண்பர்கள், பெற்றோர், துணை மட்டும் தான் எல்லா தருணத்திலும் நம்முடன் இருந்து நம்மை கீழ விழவிடாமல் தாங்கிப் பிடிப்பார்கள். அனைவருக்கும் நல்ல நபர்கள் கிடைத்துவிடுவதில்லை.

பள்ளி, கல்லூரி, நடுவயது என எல்லா காலத்திலும் புதுபுது நண்பர்கள் அமைவார்கள். ஆனால், எல்லா காலத்திலும் ஒரே நண்பர்கள் உடன் இருப்பது என்பது பெரிய வரம்.

சிறந்த உறவு....

சிறந்த உறவு....

இரத்த பந்தம், அக்கம், பக்கத்தினர், பெண் கொடுத்தோர், பெண் எடுத்தொர், ஒண்ணுவிட்ட, ரெண்டுவிட்ட சொந்தங்களை விட நட்பு தான் சிறந்த உறவு. உதவி என்பதை கேட்காமல் செய்வதிலும், செய்த உதவியை சொல்லி காட்டாமால் இருப்பதால் தான் நட்பு சிறந்த உறவாக திகழ்கிறது.

மீண்டும் ஒரு காதல்...

மீண்டும் ஒரு காதல்...

நாம் எதிர்பார்ப்பதை விட, எதிர்பாராதவை தான் நமது வாழ்வில் அதிகம் நடக்கும். எதிர்பாராத சந்தோசங்களை ஏற்றுக்கொள்ளும் நாம், எதிர்பாராத துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதிலும் காதல் தோல்வியில் துவண்டு விட்டால், வாழ்வில் துளிர்விட முடியாது. வாழ்வில் மீண்டும் காதல் வரும், ஆனால், தொலைத்த வாழ்க்கை வருமா?

மீண்டு வர செய்யும் ஒரு காதல்...

மீண்டு வர செய்யும் ஒரு காதல்...

மீண்டும் வரும் காதல் உங்களை மீண்டு வர வைக்கும், உங்களை தோல்விகளில் இருந்தும், துன்பங்களில் இருந்து மீட்டு வரும். அத்தகைய காதலை நீங்கள் தேடி செல்ல தேவையில்லை. அதுவாக தேடி வரும்.

தாமதிக்க வேண்டாம்...

தாமதிக்க வேண்டாம்...

இது சரியான நேரம், இவர் தான் நமக்கான சரியான துணை என்றாகிவிட்ட பிறகு, அவரது கரம் பிடிக்க, நேரம், காலம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

நெருக்கடி!

நெருக்கடி!

நெருக்கடி இல்லாத சூழல், தோல்வி இல்லாத தருணங்கள், அழுகை இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. காரம் என்றால் என்ன என்பதை உணராத வரைக்கும் உங்களால் இனிப்பின் உண்மையான சுவை என்பதை உணரவே முடியாது. அப்படி தான் நமது வாழ்க்கையும். தோல்வியை காணாத வரை, வெற்றியின் திறன் மற்றும் மதிப்பை நாம் உணர முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips From MS Dhoni The Untold Story Movie

நெருக்கடி இல்லாத சூழல், தோல்வி இல்லாத தருணங்கள், அழுகை இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. காரம் என்றால் என்ன என்பதை உணராத வரைக்கும் உங்களால் இனிப்பின் உண்மையான சுவை என்பதை உணரவே முடியாது. அப்படி தான் நமது வாழ்க்கையும். தோல்வியை காணாத வரை, வெற்றியின் திறன் மற்றும் மதிப்பை நாம் உணர முடியாது.
Desktop Bottom Promotion