For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரக்கும், கர்சீப்பும் தான் பெண்ணுரிமையா?

|

அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட வகையில் பெண்ணுக்கான சம உரிமை இந்த சமூகத்தில் கிடைக்க வேண்டும் என்பது தான் பெண்ணுரிமை (அ) இதை தான் பெண்ணியவாதிகள் முன் வைக்கின்றனர். ஆனால், பெண்ணுரிமை என்பது ஆணுடன் போட்டியிடும் வகையில் இன்று பெரும்பாலான இளம் தலைமுறை பெண்கள் காண்கின்றனர்.

தவறை திருத்திக் கொள்வது தான் மனித இயற்கை. ஆண்கள் திருத்திக் கொள்ளாத தவறில் நானும் சம பங்கில் ஈடுபடுவேன் என்பதா பெண்ணுரிமை?

சமீபத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான உரையாடல் நிகழ்ச்சியில், தன்னை பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி என்று முன்னிறுத்திக் கொண்டு பேசிய ஓர் பெண்ணின் கருத்து ஆண்களை மட்டுமின்றி சில பெண்ணியவாதிகளையே கூட புருவத்தை உயர்த்த செய்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னதாக ஓரிரு கேள்விகள்

முன்னதாக ஓரிரு கேள்விகள்

கலாச்சார மாற்றம் என்ற பெயரில் பெண்மையை இழப்பது தான் பெண்ணுரிமையா? பெண்மை என்பது கற்பு மட்டுமே இல்லை என்பதை பெண்கள் மறந்துவிட்டனரா? தாய்மை, குடும்பத்தை நன்னெறிப் படுத்துதல், கூச்சம், தன் குடும்பத்தை செம்மைப் படுத்துதல் போன்றைவையும் கூட பெண்மை தானே.

கூச்சம் மறுத்த கலாச்சாரம்

கூச்சம் மறுத்த கலாச்சாரம்

ஐந்து வயது முதல் தொப்புள் தெரிய உடை அணிய கற்றுக் கொடுத்தால் வளர்ந்த பிறகு அந்த பெண்ணின் உடலில் கூச்சம் என்பது அறுப்பட்டு போகிறது. இதுப் போன்ற கலாச்சார மாற்றம் நமக்கு தேவை தானா.

எது தான் சௌகரியம்

எது தான் சௌகரியம்

சேலையில் இருந்து சுடிதார் சௌகரியமாக தெரிந்தது, சுடிதாரில் இருந்து மிடி, ஜீன்ஸ் சௌகரியமாக தெரிந்தது, இப்போது ஜீன்ஸ் கடந்துபோய் லெக்கின்ஸ் தான் சௌகரியம் என்று தோன்றுகிறது. இதற்கு நடுவே ஆங்காங்கே மினி ஸ்கர்ட் வேறு. இதில் எது தான் கடைசி வரை சௌகரியமாக இருக்க போகிறது?

கற்பழிப்புக்கும் உடைக்கும் சம்மந்தம் கிடையாது

கற்பழிப்புக்கும் உடைக்கும் சம்மந்தம் கிடையாது

கற்பழிப்பு என்பது மனித இனம் மட்டுமல்ல, உலகில் உயிரினம் தோன்றியதில் இருந்தே நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்கும் உடைக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், இல்லாத இச்சை உணர்வை தூண்டிவிடப்படுவதற்கும், உடைக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பதை பெண்கள் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

பொறுப்பற்ற செயல்

பொறுப்பற்ற செயல்

மது மற்றும் அநாகரீக ஆடை அணிவதை பற்றி தட்டிக் கேட்க ஆண்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது. அப்போது இனிமேல் கணவன் அல்லது மகன் மதுவருந்தினால் மனைவி அல்லாது தாய் தட்டிக் கேட்கவோ, அறிவுரைக்கவோ உரிமை இல்லையா?

தவறுகளில் எதற்கு சமவுரிமை?

தவறுகளில் எதற்கு சமவுரிமை?

மதுவருந்துவது என்பதே தவறான செயல் தான். மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று சொல்லும் நாட்டில், பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று சொல்லும் நாட்டில், கேடு விளைவிக்கும் செயலில் சமவுரிமை கேட்பது தான் பெண்ணுரிமையா?

எதிர் கேள்வி

எதிர் கேள்வி

நம் நாட்டின் கண்கள் என்று சொல்லும் நம் நாட்டிலும் தான் கற்பழிப்பு அதிகம் நடக்கிறது. அதற்காக நாங்கள் குடிப்போம், கர்சீப் கட்டுவோம் என்று வம்படியாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும் தோழியே?

ஆண்களுக்கும் மேல்..

ஆண்களுக்கும் மேல்..

ஆண்களுக்கு நிகரான சமவுரிமை கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆண்களுக்கும் மேல் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்ய முடியும். ஆனால், பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆண்களால் செய்ய முடியாது. ஆகவே, நீங்கள் ஆண்களை காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை முதலில் மனதில் நிறுத்துங்கள்.

தனி ஒருவன்

தனி ஒருவன்

இன்று நாம் மூச்சுவிடுவது கூட சமூக ஊடகங்களில் பதிவாகின்றன. இந்த நேரத்தில் ஒளி ஊடகம் வழியே பெண்ணியம் என்ற பெயரில் மதுவையும், கர்சீப் உடையையும் முன்னிறுத்தி பெண்ணியத்தை கொச்சை ஆக்க வேண்டாம்.

பெண்ணுரிமை எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது

பெண்ணுரிமை எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது

பெண்ணுரிமை என்பது யாரும் வழங்கவே, கொடுக்கவோ வேண்டியது அல்ல. பெண்களே எடுத்துக் கொள்ள வேண்டியது. ஆனால், தயவு செய்து நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் கையில் தீயவை இருக்கின்றன என அதிலும் சமப்பங்கு கேட்க வேண்டாம். முடிந்தால் ஆண்களின் கையில் இருக்கும் தீயவற்றை தட்டிவிட முயற்சி செய்யுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is This What We Called Feminism

Is This What We Called Feminism,
Desktop Bottom Promotion