For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே.... ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க...!

By Maha
|

Why Men Hate To Be Compared?
பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது பிடிக்காது. அதிலும் மனைவி கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அப்போது அவர்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. ஏனெனில் ஆண்களுக்கு எப்போதும் அவர்களுக்கு பிடித்த மாதிரி தான் நடப்பார்கள். அது பெண்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்போது அவர்களை நம்முடன் பழகிய மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரத்தில் வீடே இரண்டாகிவிடும். சில சமயங்களில் வீட்டில் பெரிய பூகம்பமே வந்துவிடும். மேலும் அவர்கள் ஒரு சில நேரங்களில் கூட பொறுமையாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் அவர்களுக்கு பிடிக்காத யாருடனாவது ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அத்தகையவர்கள் யார் என்றும் கூறுகின்றனர்.

* மாமனார்: எப்போதும் வீட்டில் சண்டை வந்தால், உடனே அனைத்து மனைவியர்களின் வாயிலிருந்தும் வரும் சொல், "உன் அப்பாவை மாதிரியே நடந்துக்குற பார்!" என்று சொல்வார்கள். எந்த ஆணுக்கும் எப்போதும் பொதுவாக அவர்களது அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது. அவர்களுக்கு அவர்களது அப்பா மிகவும் முக்கியமான ஒருவர் தான், ஆனால் அதற்காக அவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் சுத்தமாக பிடிக்காது. மேலும் எப்போது அவர்களிடம் ஒரு முறை பேசி சண்டை வந்ததோ, அப்போதிருந்தே அதை மறுபடியும் பேசுவதை விட்டுவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய பேச்சு ஒரு நல்ல உறவுகளுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

* நண்பர்கள்: எந்த கணவனுக்கும் தன் மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும் பிடிக்காது. என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், தன் மனைவியை யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது தெரிந்தும், அவர்களிடம் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அந்த நேரமே அவ்வளவு தான். மேலும் கணவன்மார்கள் அனைவரும், தன் மனைவிக்கு தானே ஒரு நண்பன் மற்றும் அனைத்தும் என்றும் மனதில் நினைத்திருப்பார்கள். ஆகவே அத்தகைய கணவரை எப்போதும் நண்பர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

* பழைய காதலன்: திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து, அவன் நல்லவனாக இருந்தும், திருமணம் செய்ய முடியாமல் போய், மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம் உங்களது முதல் காதல் பற்றி சொல்லியும், உங்களை திருமணம் செய்தவர், உங்களை சந்தோஷமாக வைத்து, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழும் போது, ஒரு சில நேரத்தில் உங்கள் கணவன், ஏதோ ஒரு டென்சனில், உங்களை திட்டிவிட்டால், அப்போது நீங்கள் வாய் தவறிக் கூட பழைய காதலனுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். ஏனெனில் எந்த இடத்தில் பாசம் இருக்கிறதோ, அதே இடத்தில் பொறாமையும், கோபமும் இருக்கும். ஆகவே எப்போதும் இவர்களுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

* தோழியின் கணவன்: ஆண்களுக்கு ஒப்பிட்டுப் பேசினாலே பிடிக்காது என்று சொல்லும் போது, அது யாராக இருந்தால் என்ன? அதிலும் உதாரணமாக, உங்கள் தோழியின் கணவன் அவளுக்கு ஒரு நல்ல சேலை வாங்கி வந்து கொடுத்து, உங்கள் கணவன் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு, தன்னால் முடிந்த ஒன்றை ஆசையாக வாங்கி வரும் போது, அந்த நேரத்தில் நீங்கள் அதைப்பற்றி பேசும் போது கண்டிப்பாக அவர்களுக்கு கோபம் வரும். ஆகவே இது போன்ற விஷயத்திலும் கவனமாக புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

எனவே இத்தகையவர்களுடன் எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் கணவன் என்ன தான் செய்தாலும், அவர்களது குணத்தை, சூழ்நிலையை மற்றும் அனைத்தையும் புரிந்து நடந்துகொண்டால், கண்டிப்பாக வாழ்க்கையானது நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

English summary

Why Men Hate To Be Compared? | பெண்களே.... ஆண்களை எப்போதும் மற்ற ஆண்களோடு ஒப்பிட்டு பேசாதீங்க...!

Men hate comparison. Especially, if it is done by their wives. Both men and women hate being compared to some one else. But, the male ego is greatly hurt and they feel offended when they compared to some particular people. There are some people whom men hate to be compared with. So, never compare your spouse with any one.
 
Story first published: Saturday, August 11, 2012, 10:58 [IST]
Desktop Bottom Promotion