Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிங்க.. இருமடங்கு வேகத்தில் உடல் எடை குறையும்.. ருசியானதும் கூட..
Weight Loss Karuppu Kavuni Kollu Kanji Recipe In Tamil: உங்களுக்கு தொப்பை இருக்கா? அந்த தொப்பையை குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? முக்கியமாக உடற்பயிற்சியுடன், டயட்டிலும் இருக்கிறீர்களா? தொப்பையை குறைக்க நீங்கள் சாப்பிடும் உணவுகள் ருசியாக இல்லையா? தினமும் ஒருவித வெறுப்புடனே காலை உணவை உட்கொள்கிறீர்களா?
அப்படியானால் அந்த காலை உணவை ருசியானதாகவும், சத்தானதாகவும் மாற்ற நினைத்தால் கஞ்சியை குடியுங்கள். அதுவும் சிறுதானியங்கள், கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, மூங்கில் அரிசி போன்றவற்றைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, அது சுவையாக இருப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.

அதுவும் கருப்பு கவுனி அரிசியுடன், கொள்ளு சேர்த்து கஞ்சி தயாரித்து தினமும் குடித்து வந்தால், உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும். முக்கியமாக இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிக்கலாம்.
உங்களுக்கு கருப்பு கவுனி கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கஞ்சி பவுடருக்கு...
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* கொள்ளு - 1 கப்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
கஞ்சி செய்வதற்கு...
* கஞ்சி பவுடர் - 3 ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
* சின்ன வெங்காயம் - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு,
சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் கருப்பு கவுனி அரிசியை போட்டு அதையும் நன்கு
வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் வறுத்து குளிர வைத்த பவுடரை
போட்டுக் கொள்ள வேண்டும். பின் கஞ்சி தயாரிக்கும் போது தேவையான அளவு
எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அடுத்து கஞ்சி தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் பவுடரை
எடுத்து, அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து கைவிடாமல் தொடர்ந்து கிளறி
விட வேண்டும்.
* கஞ்சியானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்துவிட்டு,
அவ்வப்போது கிளறி விட்டால் போதும்.
* கஞ்சியானது தயாராகிவிட்டால், கெட்டியாவதை நன்கு காணலாம்.
* கஞ்சி கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைத்து, வேண்டுமானால் அதில்
மோரை ஊற்றி நன்கு கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயத்தையும் சேர்த்து கலந்தால், சுவையான கருப்பு கவுனி கொள்ளு
கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
