Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க..
Weight Loss Kanji Recipes: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? அதற்காக தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்து வருகிறீர்களா? அப்படியானால் விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்.
அதுவும் காலையில் உடல் எடையைக் குறைக்க உதவுமாறான கஞ்சி போன்ற உணவுகளை எடுத்து வரும் போது, ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைவதைக் காணலாம். அப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான கஞ்சி தான் கருப்பு கவுனி அரிசி கஞ்சி.

இந்த கஞ்சியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இதை எடுக்கும் போது நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் மூலம் எடை இழப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சியை இரண்டு விதங்களில் செய்யலாம். ஒன்று கவுனி அரிசி இனிப்பு கஞ்சி மற்றும் கவுனி அரிசி உப்பு கஞ்சி. இதில் இனிப்பு கஞ்சி குழந்தைகள் விரும்பி குடிக்குமாறான சுவையில் இருக்கும்.
உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் கருப்பு கவுனி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடல் எடையை குறைக்க உதவும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து அரைப்பதற்கு...
* கருப்பு கவுனி அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 6 கப்
இனிப்பு கஞ்சிக்கு...
* உப்பு - 1 சிட்டிகை
* நாட்டுச் சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 3 கப்
கார கஞ்சிக்கு..
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - தேவையான அளவு
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் கருப்பு கவுனி அரிசியை
எடுத்து நீரில் 4-5 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 9-10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஊற வைத்த நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த
நீரை சமைக்கும் போது பயன்படுத்த வேண்டும்.
* பின்னர் அரிசியை மிக்சர் ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரில் அரைத்த கவுனி அரிசி பொடி, 5-6 கப் நீரை ஊற்றி,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை கலந்து விட
வேண்டும்.
* பின் இந்த கஞ்சியைக் கொண்டு உப்பு, இனிப்பு என இரண்டு விதமாக கஞ்சி
தயாரித்துக் குடிக்கலாம்.
* அதில் இனிப்பு கஞ்சி செய்ய ஒரு பாத்திரத்தில் பாதி வேக வைத்த கவுனி
அரிசி கஞ்சியை எடுத்துக் கொண்டு, அதில் 1 சிட்டிகை உப்பு மற்றும் 5
டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து
மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கலந்து அடுப்பை
அணைத்துவிட்டால், சுவையான கவுனி அரிசி இனிப்பு கஞ்சி தயார்.
* அடுத்து உப்பு கஞ்சி செய்ய மீதமுள்ள வேக வைத்த கவுனி அரிசி கஞ்சியை
எடுத்துக் கொண்டு, அந்த கஞ்சி குளிர்ந்த பின், அதில் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு மோரை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து கலந்தால், சுவையான கவுனி அரிசி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
