Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை அசுர வேகத்தில் குறையும்..
Weight Loss Karuppu Kavuni Ulunthu Kanji Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போடித்துவிட்டதா? உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் கஞ்சியை தயாரித்துக் குடித்து வாருங்கள்.
அதுவும் கருப்பு கவுனி அரிசியுடன் கருப்பு உளுந்து சேர்த்து கஞ்சி தயாரித்து குடியுங்கள். இந்த கஞ்சி உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, கை, கால் மூட்டு வலி பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும். இந்த கஞ்சியை அனைவருமே குடிக்கலாம். அதுவும் வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசி உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கருப்பு கவுனி அரிசி - 1/4 கிலோ
* கருப்பு உளுந்து - 100 கிராம்
* சுக்குத் தூள் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
கஞ்சிக்கு...
* கவுனி அரிசி உளுந்து பொடி - 1 கப்
* தண்ணீர் - 5 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (தட்டி வைத்தது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் கருப்பு கவுனி அரிசியை நீரில் நன்கு கழுவி, ஒரு துணியில்
போட்டு, நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேப்போல்
கருப்பு உளுத்தம் பருப்பையும் நீரில் 2 முறை கழுவி, அவற்றையும்
உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உலர்த்தி வைத்துள்ள
கருப்பு கவுனி அரிசியை சேர்த்து, பொரியும் வரை நன்கு வறுத்து, ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கழுவி
வைத்துள்ள கருப்பு உளுத்தம் பருப்பையும் சேர்த்து நன்கு வறுத்து,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கருப்பு கவுனி அரிசி, உளுத்தம்
பருப்பு, சுக்குத் தூள் மற்றும் வறுத்த 2 ஏலக்காயை சேர்த்து,
ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, தேவையான போது
பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் கருப்பு
கவுனி அரிசி கஞ்சி பொடியை சேர்த்து, அத்துடன் 5 கப் நீரை ஊற்றி,
வெந்தயம் மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து கிளறி, 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கட்டிகளின்றி
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி விட வேண்டும். கஞ்சி
மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும். பின் கஞ்சியை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து, அதில் 1 கப் கெட்டியான
தேங்காய் பாலை சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு கவுனி அரிசி
உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











