Latest Updates
-
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..
இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. உடல் எடையும் டக்குன்னு குறையும்.. இரத்தமும் நல்லா ஊறும்...
Weight Loss Kambu Murungai keerai Kanji Recipe In Tamil: நீங்கள் உங்களின் தினசரி காலை உணவில் சிறுதானிய வகைகளைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்து வருகிறீர்களா? எப்போதும் ஒரே சுவையில் கஞ்சி செய்து சாப்பிட்டு போடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் கஞ்சி தயாரித்து சாப்பிட வேண்டுமா?
உங்கள் வீட்டில் கம்பும், முருங்கைக்கீரையும் இருந்தால், அவ்விரண்டையும் கொண்டு ருசியான மற்றும் சத்தான கஞ்சியை தயாரிக்கலாம். இந்த கஞ்சியை வாரம் 3 முறை உட்கொண்டு வந்தால், உடல் எடையும் குறையும், இரத்தமும் நன்கு ஊறி, இரத்த சோகை குறைபாடு தடுக்கப்படும்.

உங்களுக்கு கம்பு முருங்கைக்கீரை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* தேங்காய் - 1/4 மூடி
* இஞ்சி - 1/2 இன்ச்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கம்பை போட்டு நல்ல
மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த கம்பை சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் அரைத்த கம்பை சேர்த்து, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கம்பை கிளறி விட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, நன்கு வேகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் சீரகம், வரமிளகாய், தேங்காய், இஞ்சி
சேர்த்து அரைத்து, கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து
கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கம்பு
முருங்கைக்கீரை கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
