Latest Updates
-
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
Weight Loss Kanji Recipes In Tamil: உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? அதிகரித்த உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? ஆனால் உங்கள் டயட்டில் எப்போதும் சுவையில்லாத உணவுகள் தான் இடம் பெற்றிருக்குமா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்க காலை வேளையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான கூழை தயாரித்து குடியுங்கள். இந்த கூழை ராகி, கம்பு, சோளம் என பல்வேறு சிறுதானியங்களைக் கொண்டு தயாரித்துக் குடிக்கலாம்.

ஒவ்வொன்றும் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமாக கொளுத்தும் கோடையில், உடல் எடைக் குறைக்கவும், உடலை குளுகுளுவென்று வைத்துக் கொள்ளவும், எளிதில் ஜீரணமாகவும் உதவும் பல்வேறு கூழ் வகைகள் உள்ளன. அதில் 3 விதமான கூழ் வகைகள் குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் டாப் 3 கூழ் ரெசிபிக்கள் குறித்து உத்தமி கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த கூழ் ரெசிபிக்களை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கூழ் ரெசிபிக்களின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. ராகி கூழ்
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப் + 1 கப்
* தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மாங்காய் - 1/4
* சாதம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, 1 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில்
கரைத்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கிளறி
விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* ராகி மாவானது ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின், 1 கப் தயிருடன், 1 கப் நீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு குளிர வைத்த ராகியுடன், அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் சாதம் மற்றும்
பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து கலந்தால், சுவையான ராகி கூழ் தயார்.
2. கம்பு கூழ்
தேவையான பொருட்கள்:
* உடைத்த கம்பு - 2 கப்
* தண்ணீர் - 7 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - 1 கப்
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் உடைத்த கம்பை நீரில் 2 முறை கழுவி, அதில் உள்ள உமியை
நீக்கி விட வேண்டும். பின் அதில் நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் அந்த நீரை வெளியேற்றிவிட்டு, பின் நீரை ஊற்றி மீண்டும்
ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 7 கப் நீரை ஊற்றி, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கழுவி வைத்துள்ள கம்பை சேர்த்து
தொடர்ந்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இப்படி ஒரு 20 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5
நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கம்பு நன்கு குளிர்ந்ததும், அதில் மோரை சேர்த்து கிளறி, அத்துடன்
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கலந்தால்,
சுவையான கம்பு கூழ் தயார்.
3. சோள கூழ்
தேவையான பொருட்கள்:
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மாங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து, 1 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கிளறி, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு தயிரை நன்கு அடித்து மோர் போன்று செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அடித்து வைத்துள்ள தயிரை சோள கஞ்சியுடன் சேர்த்து,
அத்துடன், நறுக்கிய வெங்காயம், மாங்காய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து கலந்தால், சுவையான சோள கூழ் தயார்.



Click it and Unblock the Notifications


