Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
வாரம் 2 முறை இந்த கஞ்சியை குடிங்க.. உடல் எடை 2 மடங்கு வேகத்தில் குறையும்...
Weight Loss Panivaragu Coconut Milk Kanji Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க நீங்க டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் எடையை வேகமாக குறைக்க நினைத்தால் சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உணவில் அவற்றை சேர்க்கும் போது எடை வேகமாக குறையும்.
சிறுதானியங்களில் பல உள்ளன. அதில் ஒன்று தான் பனிவரகு அரிசி. மற்ற சிறுதானியங்களைப் போல் பனிவரகு அரிசி அவ்வளவு எளிதில் கிடைக்காது. இந்த அரிசியின் ஸ்பெஷலே இந்த தானியத்திற்கு நீர் அதிகம் தேவைப்படாது. பனிகாலத்தில் காற்றில் உள்ள ஈரப்பசையைக் கொண்டே இந்த தானியம் செழிப்பாக விளையக்கூடியது. முக்கியமாக இந்த பனிவரகு அரிசியில் நார்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளன.

குறிப்பாக இந்த பனிவரகு அரிசி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒருவேளை மஞ்சள் நிறத்தில் இல்லாமல் இருந்தால், அந்த பனிவரகு அரிசியை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இந்த பனிவரகு அரிசியைக் கொண்டு ஏராளமான ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் கஞ்சி செய்து தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டால், இன்னும் சுவையாக இருப்பதோடு, நல்ல பலனையும் பெறலாம்.
உங்களுக்கு பனிவரகு தேங்காய் பால் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பனிவரகு தேங்காய் பால் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பனிவரகு அரிசி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2
* வெந்தயம் - 1/2
* பூண்டு - 5 பல்
* தண்ணீர் - 4 கப்
* தேங்காய் பால் - 1 கப்
துவையலுக்கு...
* கருப்பு எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 4
* தேங்காய் - சிறிது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பனிவரகு அரிசியை எடுத்து, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய பனிவரகு அரிசியை போட்டு, அத்துடன் 4 கப்
நீரை ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 5 பூண்டு பற்களை தட்டிப் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை
சேர்த்து வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் வரமிளகாயையும் கூட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், வரமிளகாய், வறுத்த எள்ளு
விதைகள், புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று
கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து,
கஞ்சியை கரண்டியால் கிளறிவிட்டு, பின் அதில் 1 கப் தேங்காய் பாலை
ஊற்றி கிளறினால், சுவையான பனிவரகு தேங்காய் பால் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications





