Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும் குறையும், உடலும் வலுபெறும்..
Weight Loss Karuppu Kavuni Kollu Kanji Recipe In Tamil: உங்களின் அசிங்கமான தொப்பையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, கடுமையான டயட்டிலும் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் பெரும்பாலும் சுவையில்லாத உணவுகள் தான் அதிகமாக இருக்குமா?
இதுவரை டயட் என்றால் நீங்கள் உடனே ஓட்ஸை தினசரி உணவில் சேர்த்து வந்திருக்கலாம். ஆனால் இனிமேல் ஓட்ஸிற்கு பதிலாக, கருப்பு கவுனி அரிசி இருந்தால், அதைக் கொண்டு அருமையான கஞ்சியை தயாரித்து குடியுங்கள். ஏனெனில் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். அதுவும் அந்த கருப்பு கவுனி அரியுடன் கொள்ளு சேர்க்கும் போது, தசைகள் இறுக்கமடைந்து, உடல் வலுபெறும்.

உங்களுக்கு கருப்பு கவுனி கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் எஉங்கள் கருத்துக்களைப் கர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* கொள்ளு - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால்/மோர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு கவுனி
அரிசியை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் கொள்ளு பருப்பை சேர்த்து அதையும் நல்ல மணம்
வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து ப்ரை செய்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை வறுத்து இறக்கி, அனைத்து
பொருட்களையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு
அடைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் அரைத்த பவுடரை எடுத்து, அதில்
கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து
தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கஞ்சி சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் பூண்டு பற்களை நன்கு
தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேவைப்பட்டால் மோர் அல்லது தேங்காய் பால் சேர்த்து
கலந்து கொள்ளுங்கள். இப்போது சுவையான கருப்பு கவுனி கொள்ளு கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications





