Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
4 பெரிய வெங்காயமும், 10 பல் பூண்டும் இருந்தா இந்த வெங்காய கெட்டி சட்னியை அரைங்க... தோசைக்கு செமயா இருக்கும்...
Vengaya Getti Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப இந்த தள்ளுவண்டி வெங்காய கெட்டி சட்னியை செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் பெரிய வெங்காயம், பூண்டு, வர மிளகாய் மற்றும் உளுந்தம் பருப்பு போன்ற எளிய பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றை வைத்தே டக்குனு இந்த சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னி அவரசமாக சமைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதான மற்றும் சுவையான சட்னி என்றால் அது இதுதான்.

உங்களுக்கு ஸ்பெஷலான தள்ளுவண்டி வெங்காய கெட்டி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தள்ளுவண்டி வெங்காய கெட்டி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 சிவப்பு வெங்காயம், நறுக்கியது
- 10 வர மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
- ¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- 10 பல் பூண்டு
- தேவையான அளவு உப்பு
- சிறிய உருண்டை அளவிலான புளி
தாளிக்க:
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் வெல்லம்
செய்முறை:
- முதலில் வர மிளகாயை சூடான நீரில் ஊற வைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ½ டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ½ டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் ¼ டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.
- உளுந்தம் பருப்பு வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் 10 பல் பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
- பூண்டு பாதி வெந்ததும் நறுக்கிய 4 வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் லேசாகச் சுருங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து, வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை சமைக்கவும்.
- இப்போது ஊறவைத்த வர மிளகாய் மற்றும் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இந்த கலவையை முழுமையாக ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் 4 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் 1 டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் அதில் ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்க்கவும்.
- அதன்பின் அரைத்து வைத்த வெங்காய சட்னியை ஊற்றி 2 நிமிடங்கள் கிளறவும்.
- பின்னர் 1 டீஸ்பூன் வெல்லம் மற்றும் ½ டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
- எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான வெங்காய கெட்டி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











