Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
வெண்டைக்காயை வெச்சு.. இந்த மாதிரி கார குழம்பு செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார குழம்பு பிடிக்குமா? பொதுவாக கார குழம்பு என்றால் கத்திரிக்காய், முருங்கைக்காய் வைத்து தான் செய்வோம். ஆனால் வெண்டைக்காய் கொண்டு செய்யும் கார குழம்பு இன்னும் அருமையாக இருக்கும்.
அதுவும் அந்த வெண்டைக்காயுடன், வேர்க்கடலை சேர்த்து கார குழம்பு செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி கார குழம்பு செய்தால், வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கார குழம்பு ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி வீட்டில் உள்ளோர் செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான வெண்டைக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* வெண்டைக்காய் - 200 கிராம் (சற்று நீளவாக்கில்
துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (1 1/2 கப் நீரில் ஊற வைத்தது)
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 1/2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் பச்சை வேர்க்கடலையை போட்டு, அதில் 1 கப் நீரை
ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து, 1
1/2 கப் நீரை ஊற்றி, ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெண்டைக்காய் சேர்த்து நன்கு சுருங்கும் வரை வதக்கி இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அதில்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சாம்பார் தூள்
மற்றும் 1 கப் நீரை கூடுதலாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா நீரை ஊற்றி கிளறி,
வெல்லத்தை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மிதமான
தீயில் வைத்து, 15-20 நிமிடம் நன்கு சுண்ட கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் மிளகுத் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் கார
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











