Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது..
Vegetable Uthappam Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை தான் செய்வீர்களா? எப்பவும் ஒரே மாதிரியான சுவையில் தோசை செய்து போரடித்துவிட்டதா? மேலும் தோசை செய்தால், அதற்கு சட்னி, சாம்பார் என்று பல சைடு டிஷ்களை செய்ய வேண்டும். ஆனால் எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாத ஒரு அற்புதமான டிபன் ரெசிபி உள்ளது. அது தான் வெஜிடேபிள் ஊத்தாப்பம்.

இந்த ஊத்தாப்பம் செய்ய 1 கப் இட்லி மாவு இருந்தால் போதும். சட்டென்று செய்துவிடலாம். முக்கியமாக இந்த ஊத்தாப்பத்தை வீட்டில் மாவு குறைவாக இருக்கும் போது செய்தால், சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். குறிப்பாக இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது.
இந்த வெஜிடேபிள் ஊத்தாப்பம் குறித்து அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெஜிடேபிள் ஊத்தாப்பம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் ஊத்தாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1
* பெரிய கேரட் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பெரிய கேரட்டை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, எள்ளு விதைகளை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் கலந்து வைத்துள்ள மாவு முழுவதையும் சேர்த்து, பரப்பி
விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, ஊத்தாப்பத்தை திருப்பிப் போட்டு,
மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால், சுவையான
வெஜிடேபிள் ஊத்தாப்பம் தயார்.



Click it and Unblock the Notifications