Latest Updates
-
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்!
ராகி ஊத்தாப்பமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Ragi Utthappam With Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் ஒரு மாதிரியான டிபன் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகியைக் கொண்டு ஊத்தாப்பம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்து கொடுங்கள். இந்த ராகி ஊத்தாப்பம் சுவையாகவும் இருக்கும், சத்தானதும் கூட. உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒருமுறை இந்த டிபன் காம்போவை செய்து கொடுங்கள்.
இந்த ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ஊத்தாப்பம் மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவிற்கு...
* அவல் - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* மோர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - பொடியாக நறுக்கியது
* கொத்தமல்லி - (பொடியாக நறுக்கியது)
சட்னிக்கு...
* பூண்டு - 3 பல்
* தக்காளி - 2
* வெல்லம் - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அவலை எடுத்து நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அவலை நீருடன் அப்படியே சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ராகி மாவு, மோர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 3 பல் பூண்டு, தக்காளி, வெல்லம்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை
மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து 1
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், கார சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தயாரித்து வைத்துள்ள மாவை, ஊத்தாப்பம் போன்று ஊற்றி, மேலே பொடியாக
நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, எண்ணெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ராகி ஊத்தாப்பம் தயார்.



Click it and Unblock the Notifications
