For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளான் சீஸ் சாண்ட்விச்

By Maha
|

சிலர் காலை வேளையில் சாண்ட்விச்சை காலை உணவாக எடுத்து வருவார்கள். அப்படி நீங்கள் காலையில் சாண்ட்விச் சாப்பிடுபவர்களாக இருந்தால், காளான் சீஸ் சாண்ட்விச் செய்து சாப்பிடுங்ள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. காலையில் சாப்பிடுவதற்கு ஏற்றது.

இங்கு அந்த காளான் சீஸ் சாண்ட்விச் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Yummy Mushroom Cheese Sandwich Recipe

தேவையான பொருட்கள்:

பிரட் - 6 துண்டுகள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பட்டன் காளான் - 150 கிராம்
பூண்டு சீஸ் - 3 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அனைத்து பிரட்டுகளின் ஒரு பக்கத்தில் வெண்ணெயை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் காளானை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

காளானானது தண்ணீர் விட ஆரம்பிக்கும் போது, அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும் இறக்கி, அதில் பூண்டு சீஸ், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் தடவி, பின் பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் மூன்று பிரட் துண்டுகளை எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் காளான் கலவையை தடவி, மீதமுள்ள பிரட்டுகளைக் கொண்டு மூடி வைத்து, பின் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு முன்னும் பின்னும் சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால், காளான் சீஸ் சாண்ட்விச் ரெடி!!!

English summary

Yummy Mushroom Cheese Sandwich Recipe

Fond of mushroom? Try making this yummy mushroom cheese sandwiches for breakfast. The best thing about this vegetarian meal is it boosts your immunity.
Story first published: Friday, June 27, 2014, 18:06 [IST]
Desktop Bottom Promotion