For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருசியான... வாழைக்காய் ஃப்ரை

By Maha
|

அனைத்து வகையான சாம்பார் மற்றும் கிரேவிகளுக்கு ஏற்றவாறான ஓர் சைடு டிஷ் தான் வாழைக்காய் ஃப்ரை. மேலும் இதனை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

சரி, இப்போது அந்த வாழைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Vazhakkai Fry Recipe

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைக்காய் மற்றும் இதர அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைக்காய் ஃப்ரை ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

English summary

Vazhakkai Fry Recipe

Vazhakkai fry is a simple side dish for any gravy. It is easy to make. So please try this and let me know what you think...
Story first published: Tuesday, November 17, 2015, 13:23 [IST]
Desktop Bottom Promotion