For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடுப்பி ஸ்டைல் சாம்பார்

By Maha
|

சாம்பரில் எத்தனையோ ஸ்டைல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உடுப்பி ஸ்டைல் சாம்பார். இந்த சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதற்கு மசாலா அரைத்து செய்வது தான். அதனால் இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். இங்கு அந்த உடுப்பி ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ரெசிபியை மிகவும் சீக்கிரம் செய்யலாம். மேலும் மிகவும் ஈஸியான செய்முறையுடனும் இருக்கும். சரி, இப்போது அந்த உடுப்பி ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

இந்த ரெசிபியை வீடியோவில் பார்க்க...

Udupi Style Sambar Recipe

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 20-25 (தோல் நீக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
காய்கறிகள் (கத்திரிக்காய், கேரட், பரங்கிக்காய்) - 2 கப்
புளிச்சாறு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து, பின் வரமிளகாய், மல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் காய்கறிகளை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.

அடுத்து, அதில் தண்ணீர், புளிச்சாறு, நாட்டுச் சர்க்கரை, உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

இறுதியில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உடுப்பி ஸ்டைல் சாம்பார் ரெடி!!!

English summary

Udupi Style Sambar Recipe

Udupi sambar which is also known as Udipi sambar is prepared using the normal sambar recipe except for a delightful twist. A special masala paste is added which makes this sambar taste entirely different from rest of the sambar recipes. Take a look at this special udupi style sambar recipe and give it a try.
Desktop Bottom Promotion