சிம்பிளான மற்றும் சத்தான சில கூட்டு ரெசிபிக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மதிய வேளையில் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து பலருக்கும் போர் அடித்திருக்கும். அதிலும் திங்கட்கிழமை வந்தால் என்ன சமைப்பதென்றே தெரியாது. அப்படி உங்களுக்கு இன்று என்ன சமைப்பதென்று தெரியவில்லையா? அப்படியெனில் இன்று கூட்டு செய்யுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஒன்றை தேர்வு செய்து சமைத்து சுவையுங்கள்.

மிகவும் ஈஸியான பொரியல் ரெசிபிக்கள்!

இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை மிகவும் சிம்பிளான மற்றும் சத்தான சில கூட்டு ரெசிபிக்கள். இவற்றின் செய்முறை மிகவும் எளிமையானதாக இருக்கும். பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த கூட்டு ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

ருசியான சில தென்னிந்திய ரசம் ரெசிபிக்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அகத்திக்கீரை கூட்டு

அகத்திக்கீரை கூட்டு

அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும்.

செய்முறை

மணத்தக்காளி கீரை கூட்டு

மணத்தக்காளி கீரை கூட்டு

உடலில் சூடு அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இந்த கீரை உடலின் வெப்பத்தைத் தணிக்கச் செய்யும். மேலும் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவையும் குணமாகும்.

செய்முறை

கேரட் கூட்டு

கேரட் கூட்டு

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. இந்த கேரட்டை கூட்டு செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். அதிலும் இந்த கேரட் கூட்டு சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும்.

செய்முறை

பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

பூசணிக்காய் பொரியல் செய்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் இங்கு பூசணிக்காயை தட்டைப்பயறுடன சேர்த்து எப்படி கூட்டு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், ருசியாகவும் இருக்கும்.

செய்முறை

செட்டிநாடு கீரை கூட்டு

செட்டிநாடு கீரை கூட்டு

செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவம் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் பிரபலமானது. குறிப்பாக இந்த ஸ்டைல் ரெசிபிக்கள் மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இங்கு செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான செட்டிநாடு கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு

சிறுநீரக கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள். இங்கு வாழைத்தண்டைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான கூட்டு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பல சத்துக்கள் கிடைக்கும். அதிலும் முட்டைக்கோஸை பருப்புடன் சேர்த்து கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

செய்முறை

சௌ செள கூட்டு

சௌ செள கூட்டு

திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இங்கு அந்த சௌ சௌ கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

சேனைக்கிழங்கு கூட்டு

சேனைக்கிழங்கு கூட்டு

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல சத்துக்களை உள்ளடக்கிய சேனைக்கிழங்கை, கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

செய்முறை

புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டு

வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Simple And Easy Kootu Recipes

Here are some of the simple and easy kootu recipes. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter