Latest Updates
-
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மீல் மேக்கர் பிரியாணி
மதியம் எப்போதும் சாம்பார், சாதம், ரசம், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியென்றால் இன்று மீல் மேக்கர் பிரியாணி செய்து சுவையுங்கள். இந்த மீல் மேக்கர் பிரியாணி செய்வது மிகவும் சிம்பிள். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.
இங்கு அந்த மீல் மேக்கர் பிரியாணியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 1/4 கப்
மீல் மேக்கர் - 3/4 கப்
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/4 கப்
புதினா - 1/8 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1/4 இன்ச்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
செய்முறை:
முதலில் ஒரு கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் மீல் மேக்கர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் அதில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கினால், மீல் மேக்கர் பிரியாணி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
