Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பேச்சுலர்களுக்கான.. சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி
மதியம் வந்தாலே என்ன சமைக்கலாம் என்ற யோசனை தான் அனைவருக்கும் வரும். தினமும் ஏதாவது குழம்பு, பொரியல் என்று செய்து போர் அடிக்குதா. அப்படியென்றால் வித்தியாசமாக இன்று வெஜிடபிள் பிரியாணி செய்து அனைவரையும் அசத்தலாமே!
ஸ்வீட்டா, காரமா... ஒரே ஒரு கிளிக்.. உங்க இடத்துக்கே எல்லாம் வரும்!
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெஜிடேபிள் பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்யலாம். சரி, இப்போது வெஜிடேபிள் பிரியாணியை சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (முழுதாக)
புளித்த தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (சற்று பெரிதாக நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
தாளிப்பதற்கு...
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும்.
பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும். பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்....



Click it and Unblock the Notifications
