சிவப்பு காராமணி குழம்பு

Posted By:
Subscribe to Boldsky

காராமணியில் பல வெட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சிவப்பு காராமணி. பொதுவாக இந்த சிவப்பு காராமணியை வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் இதனை குழம்பு செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இங்கு அந்த சிவப்பு காராமணி குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Red Bean Curry

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப் (வேக வைத்தது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

அரைத்த தக்காளி - 1 கப்

பூண்டு - சிறிது (பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வேக வைத்துள்ள காராமணியை நீருடன் சேர்த்து ஊற்றி, அத்துடன் அரைத்த தக்காளி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 10-15 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சிவப்பு காராமணி குழம்பு ரெடி!!!

English summary

Red Bean Curry

Red bean curry is a popular North Indian curry thats eaten with rice or indian breads. Want to know how to prepare a red bean curry? Check out and give it a try....
Story first published: Thursday, April 9, 2015, 13:08 [IST]
Subscribe Newsletter