For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு போளி

By Maha
|

Potato Boli
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி போளி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

உருளைக்கிழங்கு - 6

வெங்காயம் - 2

தக்காளி - 1

மிளகாய்த் தூள் - 1 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, உதிர்த்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு மைதா மாவில் உப்புடன் சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்கு பிசைந்து கொள்வதுபோல் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக்கி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, அத்துடன் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் கலந்து கிளறி, பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.

பிறகு ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து அதனை தட்டி நடுவில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பிறகு சாதாரண போளி செய்வது போல் தோசைக்கல்லில் போளியைப் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.

இதோ சுவையான உருளைக்கிழங்கு போளி ரெடி!

Read more about: recipe vegetarian சைவம்
English summary

potato boli | உருளைக்கிழங்கு போளி

Make delicious potato boli using this simple recipe from Awesome Cuisine.
Story first published: Thursday, May 31, 2012, 12:04 [IST]
Desktop Bottom Promotion