For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியா தயாரிக்கலாம் ஆரோக்கியமான மிளகு ரசம்!

நம் வீடுகளில் அன்றாடம் செய்யக்கூடிய ரசம் சிலருக்கு சுவையாக வரவில்லையே என்று கவலையா? இதில் சொல்லப்பட்டிருக்கும் முறையில் தயாரித்துப் பாருங்கள்

By Staff
|

தேவையான பொருட்கள்:

பெரிய தக்காளிப்பழம் - 2

மிளகு - ஒன்றரை தேக்கரண்டி

புளி - கைப்பிடி அளவு

பூண்டு - 5 பல்

சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி

துவரம்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு


செய்முறை:

நறுக்கிய தக்காளிகளை 650 மில்லி தண்ணீரில் போட்டு, அதனுடன் புளியைச் சேர்க்கவும். மிளகு, சீரகம், துவரம்பருப்புஆகியவற்றைப் பொடி செய்து புளிக்கரைசலில் போடவும். அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு கொதிக்க விடவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடுகு சேர்த்து அது வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலையையும் சேர்த்து ரசத்தில் ஊற்றி இறக்கி வைத்து விடவும். இப்போது மிளகு ரசம்பரிமாறுவதற்குத் தயார்.

English summary

How To Make Milagu Rasam

How To Make Milagu Rasam
Desktop Bottom Promotion