For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மசாலா இடியாப்பம்

By Maha
|

பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இங்கு இடியாப்பத்தைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு ரெசிபி செய்யலாம். இந்த ரெசிபிக்கு மசாலா இடியாப்பம் என்று பெயர். மேலும் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.

ஏனெனில் மசாலா இடியாப்பமானது மிகவும் ஈஸியாக இருக்கும். இங்கு அந்த ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Masala Idiyappam Recipe

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
புதினா - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

இறுதியில் அதிலல் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், மசாலா இடியாப்பம் ரெடி!!!

English summary

Masala Idiyappam Recipe

Want to know how to prepare masala idiyappam? Here is the simple way. Check out and give it a try...
Story first published: Wednesday, July 2, 2014, 20:22 [IST]
Desktop Bottom Promotion