Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
தேங்காய் - 1
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
இடியாப்பம் செய்வதற்கு...
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரை ஆற வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு, அதில் உப்பு மற்றும் நீரை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. இல்லையெனில் மாவு மிகவும் கெட்டியாகிவிடும்.)
பிறகு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி தட்டில் வட்டமாக பிழியவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து, மூடி வேக வைத்து இறக்கவும்.
தேங்காய் பால் செய்வதற்கு...
தேங்காயை துருவி அதனை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில், சல்லடைக் கொண்டு தண்ணீர் ஊற்றி, வடிகட்டிக் கொள்ளவும். பின் அதில் சர்க்கரையை வேண்டுமென்றால் கலந்து வைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் இடியாப்பம் சாப்பிடும் போது சர்க்கரையை தூவி, அதன் பின் தேங்காய் பாலை விட்டும் சாப்பிடலாம்.
இப்போது ஈஸியான இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் ரெடி!!!



Click it and Unblock the Notifications