For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம் ஆலு மசாலா

By Mayura Akilan
|

Dum Alloo Recipe
உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்தமானது. ப்ரை, பொடிமாஸ், குருமா என எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். சின்ன சின்ன உருளைக்கிழங்கினை முழுதாக போட்டு செய்யக்கூடிய தம் ஆலு மசாலா குட்டீஸ்களுக்கு விருப்பமான உணவு. செய்து கொடுங்களேன்.

தேவையான பொருட்கள்

சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரியவெங்காயம் – 2
தக்காளி-1
இஞ்சி பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
ஆலு மசாலா பவுடர்- 2 ஸ்பூன்
தயிர்-4 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- 2 மேசை கரண்டி
கொத்தமல்லி-சிறிதளவு

ஆலு மசாலா செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி முழுதாக வேக வைத்து தோலுரித்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இத்துடன் தனியா தூள், மிளகாய் தூள், ஆலு மசாலா பவுடர்,உப்பு சேர்த்து கிளறவும்.

தயிர் சேர்த்து என்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்த மசாலா உடன் உருளைக்கிழங்கை சேர்த்து மசாலா ஒட்டும் வரை பிரட்டவும். அடுப்பினை சிம்மில் வைத்து சுருள விடவும். அடுப்பை நிறுத்திவிட்டு உருளைக்கிழங்கின் மீது நறுக்கிய கொத்தமல்லி தூவவும். தம் ஆலு மசாலா தயார்.

தயிர் சாதத்திற்கு ஏற்ற சைடு டிஸ், சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

English summary

Dum Aloo: Indian Potato Recipe | தம் ஆலு மசாலா

Dum Aloo is a semi dry dish of potatoes that is famous in almost every part of India. Every Indian state has its own variation of a Dum Aloo recipe slightly different from the other.
Story first published: Friday, April 27, 2012, 11:13 [IST]
Desktop Bottom Promotion