Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சுவையான மற்றும் காரசாரமான சில காளான் ரெசிபிக்கள்!!!
உலகில் எத்தனையோ ரெசிப்பிக்கள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளைத் தான். அத்தகைய அசைவ உணவுகளின் சுவைக்கு இணையான சுவையைக் கொடுக்கும் ஒரு சைவ உணவுப் பொருள் தான் காளான். மேலும் காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல. குறிப்பாக காளான் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
அசைவ உணவுகளைப் போன்றே, இந்த காளானுக்கும் எண்ணற்ற பிரியர்கள் உள்ளனர். ஆனால் அத்தகைய பிரியங்களுக்கு காளான் வாங்கி வந்தால், அவற்றைக் கொண்டு வெறும் மசாலா மட்டும் தான் செய்யத் தெரியும். மேலும் இந்த மசாலாவையே எத்தனை முறை செய்து சாப்பிட முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இப்படி இதையே தொடர்ந்து எப்போதும் செய்து சாப்பிட்டால் போர் தான் அடிக்கும்.
பச்சை பட்டாணி கொண்டு செய்யக்கூடிய அருமையான 9 ரெசிபிக்கள்!!!
எனவே தமிழ் போல்ட் ஸ்கை காளானைக் கொண்டு செய்யக்கூடிய சில சுவையான மற்றும் காரசாரமான ரெசிபிக்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பசலைக்கீரை காளான் குழம்பு
வீட்டில் பசலைக்கீரை இருந்தால், அத்துடன் காளான் சேர்த்து குழம்பு செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, காளான் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும்.

குடைமிளகாய் காளான் ரெசிபி
காளானை பொரியல் போன்று செய்து சாப்பிட நினைத்தால், குடைமிளகாயுடன் சேர்த்து வறுவல் போன்று செய்து சாப்பிடலாம். இதுவும் சூப்பராக இருக்கும்.

காளான் பிரியாணி
பிரியாணி பிரியங்களே! காளானைக் கொண்டு எப்படி பிரியாணி செய்வது என்று தெரியாதா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் படித்து செய்து பாருங்கள்.

காளான் உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபி
காளானை உருளைக்கிழங்குடன் சேர்த்து ப்ரை செய்ய ஆசைப்பட்டால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளது போன்று முயற்சித்துப் பாருங்கள். இது மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

காளான் புலாவ்
காலை வேளையில் புலாவ் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் காளான் புலாவ் செய்யுங்கள். இது மிகவும் எளிமையான செய்முறையுடன், மதிய வேளையில் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஷாஹி காளான் பிரியாணி
ஷாஹி காளானி பிரியாணி என்பது எண்ணற்ற மசாலா பொருட்களை சேர்த்து செய்யக்கூடியதால், இது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால், அவர்களிடம் நல்ல பெயரை வாங்கலாம்.

காளான் மசாலா
பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறான ஒரு ரெசிபி தான் காளான் மசாலா. ஆகவே பேச்சுலர்களே! நேரம் கிடைக்கும் போது இந்த ரெசிபியை முயற்சித்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

மஸ்ரூம் கார்ன் மசாலா
காளானை கார்ன் உடன் சேர்த்தும் சமைக்கலாம். அதிலும் மசாலா போன்று செய்தால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு அந்த காளான் கார்ன் மசாலா ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து செய்து பாருங்கள்.

காளான் சூப்
சிலருக்கு சூப் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் காளானை சூப் போட்டு குடிக்கலாம். மேலும் காளான் சூப்பை ஒரு முறை குடித்தால், பின் அதைத் தவிர வேறு எந்த சூப்பையும் குடிக்கமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அருமையான சுவையில் இருக்கும்.

காளான் மஞ்சூரியன்
குழந்தைகளை காளான் சாப்பிட வைக்க வேண்டுமானால், காளானை மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம்.

காளான் ஆம்லெட்
ஒரு நாளை ஆரோக்கியமாக துவக்க நினைத்தால், காளான் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இதனால் முட்டை மற்றும் காளானின் சத்துக்களானது உடலுக்கு கிடைத்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











