For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்

By Maha
|

கோடையில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு, அவ்வப்போது காய்கறி மற்றும் பழங்களை சாலட் போன்று செய்வது மிகவும் இன்றியமையாதது.

அந்த வகையில் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியில் அதிக நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. எனவே இத்தகையவற்றை வைத்து, காலையில் வேகமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஒரு லைட் உணவு சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இவைகளைக் கொண்டு சாலட் செய்து சாப்பிடலாம். அந்த வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியைக் கொண்டு எப்படி சூப்பரான ஒரு சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!

Cucumber And Tomato Salad

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் எலுமிச்சை சாற்றில் புதினா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் எலுமிச்சை சாறு கலவை மற்றும் ஆலிவ் ஆயிலை தெளித்து, பரிமாறினால், சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி!!!

English summary

Cucumber And Tomato Salad | வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்

For the summer heat, one vegetable that works perfectly is cucumber. Known mainly as a salad accoutrement, they have a lot more benefits than being that decorative piece around the buffet spreads.
Story first published: Friday, May 24, 2013, 11:02 [IST]
Desktop Bottom Promotion