Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கொத்தமல்லி வெச்சு சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை அதிகமா சேத்து செய்யுங்க.. செம டேஸ்டியா இருக்கும்...
Tomato Coriander Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்ய முடிவெடுத்துள்ளீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி அதிகம் உள்ளதா? அந்த கொத்தமல்லியைக் கொண்டு சட்னி செய்ய முடிவெடுத்துள்ளீர்களா? கொத்தமல்லி வைத்து சட்னி செய்ய நினைத்தால், அந்த சட்னியை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக அதுவும் வெறும் 4 பொருட்களை வைத்து சட்னியை செய்யுங்கள்.
இது தான் தக்காளி கொத்தமல்லி சட்னி. இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி சட்னி செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தக்காளி கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து ஒரு கைப்பிடி கொத்தமல்லியை நீரில் அலசி சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி கொத்தமல்லி
சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications