For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

By Maha
|

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் மண்டி ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 8 பல் (நறுக்கியது)
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மண்டி ரெடி!!!

Image Courtesy: redchillycurry

English summary

Chettinad Style Vendakkai Mandi

Vendakkai Mandi is a famous dish of Chettinad in Tamil Nadu, it is delicious, prepared with ladies finger, tamarind juice served with rice. Do you know how to prepare chettiand style vendakkai mandi? Check out and give it a try...
Desktop Bottom Promotion