Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
வாழைப்பழ இட்லி
குழந்தைகளுக்கு இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய இட்லியில் பல வகைகள் உள்ளன. அதில் வித்தியாசமான இட்லி என்றால் ரவை இட்லியைத் தான் பெரும்பாலானோர் சொல்வார்கள். ஆனால், பொட்டாசியம் அதிகம் நிறைந்திருக்கும் வாழைப்பழத்தைக் கொண்டும் இட்லி செய்யலாம் என்று தெரியுமா. ஆம், வாழைப்பழத்தைக் கொண்டு இட்லி செய்தால், குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஏனெனில் இந்த இட்லி இனிப்பாக இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 3-4 (மசித்தது)
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் - 1/2 கப் (தேவைக்கேற்ப)
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இநத் மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைப்பழ இட்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications
