For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான... அவல் தேங்காய் சாதம்

By Maha
|

Aval Coconut Rice
சாதாரணமாக எந்த சாதம் செய்வதாக இருந்தாலும், அடுப்பில்லாமல் செய்ய முடியாது என்று நினைப்பது தவறு. ஆம், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அவலை வைத்து அடுப்பில்லாமல் தேங்காய் சாதம் செய்யலாம். இந்த தேங்காய் சாதம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த அவல் தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வேர்க்கடலைப் பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை தூவவும்.

இப்போது சூப்பரான அவல் தேங்காய் சாதம் ரெடி!!!

English summary

Aval Coconut Rice | ஆரோக்கியமான... அவல் தேங்காய் சாதம்

Aval Coconut Rice is one of the healthiest and tastiest recipe. And it is very easy to prepare.
Desktop Bottom Promotion