உருளைக்கிழங்கு அவல்

Posted By:
Subscribe to Boldsky

காலையில் எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் அவல் இருந்தால், அதனைக் கொண்டு ஒரு வெரைட்டி ரைஸ் போன்று செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதுடன், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும்.

சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அவல் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Aloo Poha Recipe

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3

உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 3/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் அவலை 2-3 முறை நன்கு நீரில் அலசி நீரை வடித்து, பின் அதில் மஞ்சள் தூள் மற்றம் உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 4 நிமிடம் வேக வைத்து இறக்கி. கொத்தமல்லி மற்றும் லுமிச்சை சாற்றினை சேர்த்து பிரட்டினால், உருளைக்கிழங்கு அவல் ரெடி!!!

Image Courtesy: rakskitchen

English summary

Aloo Poha Recipe

Want to know how to prepare aloo poha in simple and easy way? Here is the recipe. Take a look...
Story first published: Thursday, September 18, 2014, 6:06 [IST]
Subscribe Newsletter