குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.. வெஜ் ஹக்கா நூடுல்ஸ் செய்வது எப்படி?

Posted By:

உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் பசிக்குது-ன்னு சொல்றாங்களா? உங்கள் குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் ஹக்கா நூடுல்ஸ் உள்ளதா? அப்படியானா ஒருசில காய்கறிகளை சேர்த்து சுவையான வெஜ் ஹக்கா நூடுல்ஸ் செய்து கொடுங்கள்.

இந்த நூடுல்ஸ் ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக இருப்பதோடு, இரவு நேரத்திலும் டின்னராக சாப்பிட ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த நூடுல்ஸ் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். வீட்டில் சாஸ்கள் இருந்தாலே போதும், இதை செய்யலாம்.

Veg Hakka Noodles Recipe In Tamil

உங்களுக்கு வெஜ் ஹக்கா நூடுல்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் ஹக்கா நூடுல்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஹக்கா நூடுல்ஸ் - 150 கிராம்

* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* முட்டைக்கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

* வினிகர் - 1 டீஸ்பூன்

* ரெட் சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்

* க்ரீன் சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு

* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அந்நீரில் ஹக்கா நூடுல்ஸ உடைத்துப் போட்டு, நூடுல்ஸை மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ், மிளகுத் தூள், வினிகர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்னர் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும். மசாலா அனைத்தும் நூடுல்ஸ் உடன் நன்கு ஒன்று சேர்ந்த பின்னர், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வெஜ் ஹக்கா நூடுல்ஸ் தயார்.

குறிப்பு:

* காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அது சாப்பிட நன்றாக இருக்காது. சற்று பச்சையாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

* முக்கியமாக காய்கறிகளை நூடுல்ஸ் போன்றே மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Thursday, March 30, 2023, 16:45 [IST]
Desktop Bottom Promotion