Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
கறி சுவையை மிஞ்சும் வாழைக்காய் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Vazhakkai Sukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காயை அடிக்கடி வாங்கி செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் வாழைக்காயை செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வாழைக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அத்தகையவர்களை வாழைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் ஒருமுறை வாழைக்காய் சுக்கா செய்யுங்கள். இந்த வாழைக்காய் சுக்கா சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது வாழைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைக்காய் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 3 (சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 100 மிலி
* உப்பு - சிறிது
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சதுரத்
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி எண்ணெயை
ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து,
சிறிது உப்பு சேர்த்து, 2 நிமிடம் வாழைக்காயை எண்ணெயில் பொரித்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம்,
பூண்டு, இஞ்சி, வரமிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், சோம்பு,
சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
தீயைக் குறைத்து கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ப்ரை செய்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு
கிளறி, சிறிது நீரைத் தெளித்து, சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால்,
சுவையான வாழைக்காய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications











