Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வாழைப்பூவை ஒருதடவை இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு ஆரோக்கியமான சைடிஷா இருக்கும்...!
Vazhaipoo Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? பொதுவாக வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு பொரியல், கூட்டு அல்லது குழம்பு என்று தான் செய்வோம். ஆனால் அந்த வாழைப்பூ வைத்து சுவையான சட்னி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னது, சட்னியா? அது நல்லவா இருக்கும்? என்று நீங்கள் சந்தேகப்படலாம்.
உண்மையிலேயே ஒருமுறை வாழைப்பூ வைத்து சட்னி செய்து பாருங்கள். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சட்னியை செய்தால், இனிமேல் வாழைப்பூ வாங்கினால் இந்த சட்னியை தான் செய்வீர்கள். அந்த அளவில் சட்னி அருமையாக இருக்கும். இந்த சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட, வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துத்தும், குறிப்பாக சிறுநீரக ஆரோக்கியத்தை பலப்படுத்தும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய வாழைப்பூ
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 4 வரமிளகாய்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் சமையல் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை:
- ஒரு ப்ரெஷான வாழைப்பூவை எடுத்துக்கொள்ளுங்கள். சில வாழைப்பூக்கள் லேசான கசப்புடன் இருக்கும், எனவே அதன் வெளி இதழ்களில் 3 அடுக்கை நீக்கிவிடவும்.
- அடுத்து, வாழைப்பூவை நார் எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு கப் வாழைப்பூ போதுமானது. மீதமுள்ள வாழைப்பூவை வாழைப்பூ உங்கள் விருப்பப்படி சமைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு சிறிய கடாயை எடுத்துக்கொண்டு, அதில் எண்ணெய், வர மிளகாய், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் சட்னி அரைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- நறுக்கிய வாழைப்பூ, துருவிய தேங்காய், வரமிளகாய், கொத்தமல்லி விதைகள், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தாளித்த வைத்த பொருட்களையும் இதில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்தால் சுவையான வாழைப்பூ சட்னி ரெடி.
- இதை இட்லி, தோசைக்கு சைடிஷாகவோ அல்லது சாதத்தில் போட்டு பிசைந்தோ சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











