Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சன்டே ஸ்பெஷல்: சுவையான... வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Varutharacha Mutton Kuzhambu: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான சுவையில் மட்டனை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த வாரம் வறுத்தரைச்ச மட்டன் குழம்பை செய்து சாப்பிடுங்கள்.
இந்த வறுத்தரைச்ச மட்டன் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு வறுத்தரைச்ச மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - 2 கப்
வறுத்து அரைப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய்,
மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மட்டனை நன்கு நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு
தூவி நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்த வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்
தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள
மட்டனை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் சுடுநீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
மூடி வைத்து மட்டனை மிதமான தீயில் வைத்து 45 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* மட்டன் வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 5-8
நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
சில நிமிடங்கள் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் சிறிது கரம் மசாலாவைத் தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்ர் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி,
கறிவேப்பிலை சேர்த்து கிளறி, குழம்பில் ஊற்றி, குறைந்தது 20 நிமிடம்
மூடி வைக்க வேண்டும். இப்போது சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications











