Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
¼ கப் கடலைப் பருப்பும், ¼ கப் துவரம் பருப்பும் இருந்தா இந்த மாதிரி அடை செய்யுங்க..எடை புயல் வேகத்துல குறையும்!
Varagu Adai Recipe in Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் சத்தான, அதே சமயம் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும் உணவுகளை தொடர்ந்து சேர்த்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.
இதுவரை உங்கள் டயட்டில் சுவையில்லாத உணவு தான் இருந்தது என்றால், உங்களின் டயட்டில் சுவையான உணவை சேர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் டயட்டில் சிறுதானியத்தால் செய்யப்பட்ட சுவையான அடையை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அடை ருசியாக இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த அடை செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். டயட்ட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல இல்லாதவர்கள் கூட இந்த அடையை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் சுவையான சிறுதானிய அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எடையைக் குறைக்க உதவும் சிறுதானிய அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் வரகு
- ¼ கப் கடலைப் பருப்பு
- ¼ கப் துவரம் பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் அவல்
- 8 காய்ந்த மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 பெரிய வெங்காயம்
- 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில் வரகை மட்டும் நன்றாக கழுவி தனியாக வைக்கவும், பின்னர் மற்ற பருப்பு வகைகள் மற்றும் அவலை தனியாக கழுவி இரண்டையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு மிக்ஸியில், முதலில் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூளை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் ஊறவைத்த வரகை தண்ணீரை வடித்து வரகை மிக்ஸி ஜாரில் போட்டு, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- பின்னர், ஊறவைத்து, தண்ணீர் வடித்த மற்ற பருப்பு வகைகள் மற்றும் அவலைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து இந்த மாவையும் அதே பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அனைத்தையும் நன்றாகக் கலந்து, குறைந்தபட்சம் 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- அடை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், துருவிய இஞ்சி ஆகிய மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தடவி, சற்று தடிமனான அடை தோசையாக ஊற்றவும்.
- மிதமான தீயில் வேகவைத்து, ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வார்த்தெடுக்கவும்.
- இந்த அடைக்கு சைடிஷே தேவையில்லை, நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications







