Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
10 வரமிளகாயும், 10 பல் பூண்டும் இருந்தா.. 5 நிமிடத்தில் இப்படி சட்னி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது!
Vara Milagai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். ஆனால் வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ருசியாகவும் இருக்கும்படியான ஒரு சட்னியை எதிர்பார்க்கிறீர்களா?
உங்கள் வீட்டில் வரமிளகாயும், பூண்டு உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த சட்னி 5 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்து வைத்துக் கொண்டால், 10 நாளானாலும் கெட்டுப்போகாது. இந்த சட்னி புளிப்பு, காரம், இனிப்பு என்று கலந்து இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த வரமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10-12
* பூண்டு - 8-10 பல்
* புளி - 1 விரல் அளவு
* வெல்லம் - 1 சிறிய டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாயை வெதுவெதுப்பான நீரில் 5
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், 8-10 பல் பூண்டு, 1 விரல்
அளவு புளி மற்றும் 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து கிளறி,
3-4 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான வரமிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications