Latest Updates
-
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Kadugu Thakkali Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு பிரமாதமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் தக்காளி சட்னி செய்ய கேட்டால், அந்த தக்காளி சட்னி செய்யும் போது, அத்துடன் ஒரு பொருளை மட்டும் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனால் அந்த சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும். அது என்ன பொருள் என்றால், கடுகு தான். ஆம், தக்காளி சட்னி செய்யும் போது கடுகை அதிகமாக சேர்த்துக் கொண்டால், ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கடுகு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடுகு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 7 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 7
* உப்பு - சுவைக்கேற்ப
* பழுத்த தக்காளி - 4 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடுகு தக்காளி சட்னி
தயார்.
Image Courtesy: Kuch Pak Raha Hai



Click it and Unblock the Notifications
