Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
நாவூறும் ருசியான.. உடைத்த முட்டை குழம்பு
நீங்கள் முட்டை குழம்பு வைத்தாலே அது மீந்து போகிறதா? அப்படியானால் உடைத்த முட்டை குழம்பு செய்யுங்கள். இந்த முட்டைக் குழம்பில் முட்டையை வேக வைத்து சேர்ப்பதற்கு பதிலாக, உடைத்து ஊற்ற வேண்டும்.
இதுவரை நீங்கள் முட்டை குழம்பு செய்து சாப்பிட்டிருப்பீர்கள். நீங்கள் செய்யும் முட்டை குழம்பு ருசியாகவே இருப்பதில்லையா? நீங்கள் முட்டை குழம்பு வைத்தாலே அது மீந்து போகிறதா? அப்படியானால் உடைத்த முட்டை குழம்பு செய்யுங்கள். இந்த முட்டைக் குழம்பில் முட்டையை வேக வைத்து சேர்ப்பதற்கு பதிலாக, உடைத்து ஊற்ற வேண்டும். இதனால் குழம்பின் சுவை அற்புதமாக இருக்கும். உடைத்த முட்டை குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு உடைத்த முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடைத்த முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* புதினா - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும், வெங்காயம், தக்காளி, புதினா ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்ற வேண்டும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மூடி வைத்து முட்டைகளை வேக வைக்க வேண்டும்.
* முட்டைகள் வேகும் வரை குழம்பை கிளற வேண்டாம். முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான உடைத்த முட்டைக் குழம்பு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications












