Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
குடியரசு தினத்துக்கு உங்க வீட்டுல இந்த மூவர்ண தோசையை சுட்டு அசத்துங்க.. எப்படி செய்றதுன்னு பாருங்க..
Republic Day Tricolor Dosa Recipe In Tamil: இன்று குடியரசு தினம் என்பதால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேசபக்தியை வெளிக்காட்டும் வகையிலும், வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலும் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், மூவர்ண தோசையை செய்து கொடுங்கள்.
இந்த மூவர்ண தோசைக்கு தேங்காய் சட்னி, சாம்பார் போன்றவை சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, இம்மாதிரியான தோசையை செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மூவர்ண தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி/தோசை மாவு - 3 கப்
ஆரஞ்சு நிறத்துக்கு..
* நன்கு கனிந்த பெரிய தக்காளி - 1
* காஷ்மீரி வரமிளகாய் - 2-3
பச்சை நிறத்துக்கு...
* கொரத்தமல்லி/புதினா - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
முவர்ண தோசை மாவை தயாரிக்கும் முறை:
* முதலில் மூன்று கிண்ணத்தில் தோசை மாவை தனித்தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஆரஞ்சு நிறத்திற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் வரமிளகாயை சில நிமிடங்கள்
வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் உள்ள மாவுடன்
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பச்சை நிறத்திற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாயைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதன்
பின் கொத்தமல்லி/புதினாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு அரைத்து, மற்றொரு கிண்ணத்தில் உள்ள
மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது மூன்று வண்ண மாவும்
தயார்.
மூவர்ண தோசை சுடும்முறை:
* ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், முதலில் 1/4
கரண்டி ஆரஞ்சு நிற தோசை மாவை எடுத்து, அதை அரைவட்ட வடியில் பரப்ப
வேண்டும்.
* அதன் பின் 1/4 கரண்டி வெள்ளை நிற தோசை மாவை எடுத்து, நடுவே பரப்ப
வேண்டும்.
* அடுத்ததாக 1/4 கரண்டி பச்சை நிற தோசை மாவை மீண்டும் அரைவட்ட வடியில்
பரப்ப வேண்டும்.
* பிறகு தோசையைச் சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும், திருப்பிப் போட்டு
1 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மூவர்ண தோசை தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications