Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
தக்காளி வேர்க்கடலை சட்னி
உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/4 கப்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2
* சின்ன வெங்காயம் - 5
* தக்காளி - 2
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை 3-5 நிமிடம் வதக்கவும்.
* இப்போது அதில் புளி, வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











